ஞாயிறு, 11 டிசம்பர், 2011

இறைவனின் இருப்பு பற்றிய விவாதங்கள்




இறைவன் இருகிறானா?இல்லையா என்னும் விவாதம் மிகப் பழமையானது.இதனை பல ஆபிரஹாமிய மதபிரச்சாரகர்கள் விவாதிக்க விரும்புவர்..இது ஏன் என்பதை தெரிந்து கொள்வோம்..

இந்த கேள்வியை விவாதிக்கும் போது இறைவன் என்று சொல்லப் படும் சக்தியின் தன்மைகள்,தேவைபடுவது இல்லை.அதாவது இறைவன் ஒருவரா ,பலரா என்பது அவசியமில்லாதது.இந்த விஷயத்தை தங்கள் மதம் குறிப்பிடும் அந்த ஒரே இறைவன் என்ற பாணியில் செய்ய மாட்டார்கள்.பொத்தாம் பொதுவாக ஒரே இறைவன் என்பார்கள்.அதாவது அனைத்து மதங்களும் சொல்லும் கடவுள்கள் அனைத்தும் ஒன்றா? .அபோது மத பிரச்சாரம் என்பது தவறு. உங்கள் புத்தகம் கூறும் கடவுள் மட்டுமே உண்மை எனில் மத புத்தக்ம் முதலில் ஆய்வுக்கு உட்படுத்தப் படவேண்டும்.உலகில் உள்ள அனைத்து மதத்தினரும் ஒரே கடவுள்(கள்) என்று ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த பொது இறைவன் பற்றிய விவாதம் சரி..

இறை மறுப்பாளர்கள் ஏன் கடவுள் இல்லையென்று கூறுகிறோம் என்றால் இந்த மதம் சார்ந்த சட்டங்கள் மற்றும் வன்முறை ஒழிக்க மட்டுமே. மதங்கள் கூறும் கடவுளை மறுப்பதே இதற்கு போதும்.அனைவரின் இன,மொழி,மத பேதமின்றி அனைவரின் வாழ்வாதாரம்,நம்பிக்கை பாதுகாக்கும் எந்த மதத்தையும் எதிர்க்க தேவையில்லை. மத சார்பற்ற மதங்களில் மக்களை பாதிக்கும் அம்சங்கள் மட்டும் மாற்றக் கோருவது சிறந்தது. .பிற‌ மதத்தினரை த்வறு என்று இம்மதம் மட்டுமே சரிஎன்னும் மதங்களை தவறு என்று நிரூபிப்பது அனைவரின் கடமையாகும்.இதற்காக பல் போர்கள்,இனவழிப்பு நடந்தன என்பதையும் அது குறித்து பெருமிதம் கொள்கிறார்கள் [சில சமயம் மறுப்பார்கள்] என்பது மிகவும் மனித நேயமற்ற செயல் ஆகும். 

இந்த கேள்வியை இறை மறுப்பு நண்பர்கள் எளிதாக எடுத்துக் கொள்ள கூடாது.மதவாதிகளின் 21ஆம் நூற்றாண்டு தந்திரங்கள் அனேகம். அதனை வகைப் படுத்துகிறேன்.

இந்த விவாதத்தில் முதலில் இப்படி கேட்பார்கள்.

1.இறைவன் இல்லை என்று நிரூபிக்க முடியுமா? 

இது என்ன முட்டாள் தன்மாக கேட்கிறார்களே என்று நினைத்து விடாதீர்கள்.இதில் திற்மையான் ஏமாற்று வேலை இருக்கிறது.

இத்னை இப்படி அணுகலாம்.ஒருவர் ஆண் என்று நிரூபி என்று கேட்க‌ப் படும் போது அவர் திருப்பி அப்படியென்றால் நான் பெண் என்று நிரூபி என்று சொலவ்து போல் ஆகும். இது.ஆணுமல்லாமல்,பெண்ணுமல்லாமலும் சிலர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அதனை தனக்கு சாதகமாக பயன் படுத்தும் முயற்சியே இது.

'க' என்பவர் பெண் என்பதற்கு சோத்னை நட்த்தப் படுகின்றது ,சோத்னை முடிவில் அவர் பெண் இல்லை. 

ஆகா அவர் ஆண் என்று கூற முடியுமா? இல்லை.என்ன கூறலாம் அவர் ஆணாக்வோ அல்லது இரு பால் சாராதவராகவோ இருக்கலாம்.
ஆகவே 'க்' என்பவர் ஆண் என்ற சோத்னை நடை பெற்றால் மட்டுமே அவர் ஆண்.
அது போல் அவர்களின் மத புத்தக்த்தில் சொல்லப் படும் ஒவொரு விஷயமும் ஐயந்திரிபர நிரூபிக்கப் பட்டால் மட்டுமே அவர்கள் மதம் சரி,ஒன்று தவ்றென்ராலும்[நிறைய இருக்குல்லா] ,மதம் தவறு, கடவுளுக்கும் அந்த மதத்திற்கும் தொடர்பு இல்லை.

இது கறுப்பு வெளுப்பு [Binary] விஷயம் அல்ல[0 அல்ல்து 1] இடையில் உள்ள்வையே மிகுதி.இறை மறுப்பாளர்கள் '0' என்கிறோம்,மத வாதிகள் '1' என்று தானே சொல்ல வேண்டும்.'0' அல்லாத எதுவுமே '1' என்கிறார்கள்.இது போல் முழுமையான் இறைமறுப்பு என்பதற்கும் குறிப்பிட்ட மதத்தின் இறைவனின் இருப்புக்கும் இடையில் பல நிலைகள் உண்டு. ஒருவன் இறைவ‌னை அறிய தியானம்,தவம்,யோகம் என்ற தேடலில் இருப்பதாக கூறுவதை இறை நம்பிக்கையாக இந்திய சமயங்கள் ஏற்கின்றன.

முழுமையாக் நம்பி அதன் படி வழிகாட்டுதல் படி வாழவில்லை எனில் நிராகரிப்போர்,வழிகேடர் என்பது என்பது ஆபிரஹாமியம்.ஆக்வே இந்திய மத‌ நம்பிக்கையாளன் ஆபிரஹாமிய மத நம்பிக்கையாள்னுக்கு இறை மறுப்பாளனே.
தேடலில் இருப்பதும் ஆபிரஹாமியத்தின் படி இறை நிராகரிப்பே..இப்படி பொது இறைவன் என்ற வாதம் .அப்போது முழுமையற்ற இறைவன் ஆகிவிடாதா என்றால் ,அவர்களுக்கு ஏமாற்ற இது போதும்.ஆகவே இதுவே இறைவன் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் வாய்ப்பு. .
*                                  *                                 *

2.இதுபோல் மதவாதிகள் தங்கள் வாழ்வில் இறைவனின் வழிநடத்தலை உனர்வது பற்றி பேசினால் நல்மாக இருக்கும். இறைவனை தொடர்பு கொள்ளல்,உணர்தல் போன்ற விஷயங்களை ஏற்கெனவே இப்பதிவில் அலசி உள்ளோம்.இதற்குள்ளும் வரமாட்டார்கள். ஏனெனில் இதுவும் முடியாது என்பது தெரியும்.இறை மறுப்பாளர்கள் தங்கள் வாழ்வில் இறைவனின் செயல் என்று எதையும் உணர்வது இல்லை,நடக்கும் நடைமுறை செயல்களை அதன் காரணிகளை கொண்டு விளக்கி விடலாம்.[இதிலும் விஷயம் இருக்கிறது.]

இதற்கு இவர்கள் வைக்கும் (பிடி)வாத்ம்தான் முதல் காரணி வாதம்.

இறைவன் என்பது மறை பொருள்,அதனை மெய் ஞானம் அடைந்து ,பகுத்தறிந்து உணர்வதே மதம் என்று கூறும் நண்பர்களே,உங்கள் தேடல் முடிவில்லாதது. உங்களுக்கும் இறைமறுப்பாள‌ர்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இறைவன் பற்றிய தேடலில் இருக்கிறோம் என்பது இறைவனின் இருப்பையோ,இலாமையோ உறுதிப் படுத்தாது என்றாலும் இத்னை நிறுவன் மதங்களின் பிரசாரகர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் இறை மறுப்பாளர்கள் அறிய வேண்டிய உண்மை.. ஆபிரஹாமிய மதத்தவருக்கு தன் மதம் மட்டுமே சரி என்ற அரசியல் சார்ந்த கட்டாயம் இருக்கிறது..இறை நம்பிக்கை கொள்வதின் அவசியம் என்ன?இல்லாவிட்டால் என்ன நஷ்டம் என்றால் பலருக்கு ஒன்றும் இல்லை.சிலருக்கு தொழில் பாதிக்கும். அவ்வளவுதான்!!!!!!!!!!!.

அதாவது இறைவனை தேடுவது என்பது விருப்பம் உள்ள‌ ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய ஆன்மீக தேடல்,அது முடிவிலாதது.இந்த கொள்கை இறை மறுப்பிற்கு ஆதரவானது.ஆக்வே இக்கொள்கையாளர்களுடன் விவாதிப்பது அவசியமில்லை.இந்து, பௌத்த,சமண மதங்கள் இக்கொள்கையை வலியுறுத்துகின்றன. ஒவ்வொருவரும் சுய விருப்பத்தில்,சுய தேடலில் இறைவனை உணர வேண்டும்.இம்மதங்களுக்கு இறைவன் என்பது ஒரு வகை உணர்வே அவ்வளவுதான்,மற்ற படி மத புத்தக்ங்களில் இருப்பது அனைத்தும் உண்மை என்று கூறுவது இல்லை.பெரும்பாலும் இம்மதத்தை சேர்ந்த நண்பர்கள் சில விதமான பழக்க வழக்க நெறிமுறைகளை பின் பற்றும் போது சில உணர்வுகள்[மன் நிம்மதி] கிடைகின்றது,அதற்காக்வே செய்கிறேன் என்பார்கள்.எ.கா ஐயப்பன் விரதம்.இவர்களுக்கு கடவுள் எப்படி பிறந்தார்,ஆதாரம் உண்டா என்பதில் கவலையில்லை,அந்த விரதத்தை பின் பற்றும் போது கிடைக்கும் உணர்வை விரும்புவதால் மட்டுமே இதனை செய்கிறார்கள்.கூட்டம் அதிகமாக் இருக்கும் போது ஏற்படும் பாதுகாப்பும் கூட மனதுக்கு இதமானது.இப்போதைய வாழ்வின் அழுத்தங்கள் குறைய ,உறவுகள்,நண்பர்கள் அனைவரையுமே நம்ப முடியாமை தவிர்க்க‌ ஒரு சுமைதாங்கி இந்த உணர்வு..

இது அனைத்து மதங்களுக்கும் பொதுவானது.ஆனாலும் இத்னை ஆபிரகாமிய மத பிரச்சாரகர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.ஏனெனில் இறை மறுப்பாளர்கள் எனக்கு அந்த‌ உணர்வு தேவையில்லை என்று கூறிவிடலாம். நண்பர் ஒருவர் கூறினார் என்று போனால் எல்லாம் அயோக்கியத் தனம் நடக்குது என்று கூறுவர்.ஏனெனில் இது அவர்களின் சிந்தனை. 

இஸ்லாமின் புனிதத் தலமான் மெக்கா,மதினவில் பிற நபிக்கையாளர்களை அனுமதிக்காததிற்கு இதுவே காரண‌ம்.அங்கு செல்லும் நம்பிக்கையாளர்கள் இவ்வளவு பேர் வருகிறார்களே,எலோரும் என்ன முட்டள்களா?,ஆக்வெ இது உண்மை,என்று நம்புவதால் மன் நிம்மதி கிடைக்கிறது,நம்பிககை அதிகரிக்கிற‌து.இது அனைத்து மதத்தவருக்கும் அவர்கள் புனித்மாக கருதும் இடங்களில் கிடைக்கும் என்பதால் இதை மட்டும் வைத்து இறைவனின் இருப்பை கூற முடியாது. இறைவன் அனைத்து மதத்தவரின் புனித இடங்களிலும் இருக்கிறார் என்றால் கதை முடிந்தது,மத பிரச்சாத்தை நிறுத்தி விடலாம்.

ஆக்வே இந்த உணர்வுகள் கொடுக்கும் நிம்மதிக்காக்வே மதம் பின் பற்றப் படுகின்ரது என்ற உண்மையை ஆபிரஹாமிய மதத்தவர் மறை(று)க்கின்றனர்.

___________

இன்னும் ஒரு விஷயத்தை புரிந்து கொல்ளுங்கள் தன்னை மட்டுமே அனைவரும் வணங்க வேண்டும் என்ற பொறாமை பிடித்த ஒரே கடவுளுக்குத்தான் தன் இருப்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. அக்கட்வுளை இல்லையென்று சொல்வதற்கு பிற மத நம்பிக்கையாளர்களின் இருப்பே போதுமானது. இந்திய சமயங்களின் கடவுள் நம்பிக்கை, ஆபிரஹாமிய கடவுள் நம்பிக்கைக்கு எதிரானது.
ஆக்வே இறைவன் உண்டா இல்லையா என்று பொதுவில் வாதம் செய்வது ஆபிரஹாமிய பிரச்சாரகர்களுக்கு சில சாதகங்களை ஏற்படுத்தும் அதாவது அவர்களுக்கு தப்பிக்க வாய்ப்பு கிடைக்கிற‌து.அவர்கள‌து கொள்கை இதுதான்.

1.இறைவன் உண்டு என்று விவாதத்தில் சொல்லப் படும் வாதங்கள்

 அ)'இறைவன் இல்லை என்று நிரூபி',

ஆ)இந்த முதல் காரணி வாதம் வைத்து குழப்புவது.[அடுத்த பதிவில் ]

2.இதற்கு பதில் சொல்ல முடியாது என்று நினைத்துக் கொண்டு வாதத்தில் வெற்றி என்பதும்,பிற மதங்களை விமர்சிக்கும் போது அவர்களின் மத புத்தங்களில் கூட எங்கள் மதமே கூறப்பட்டு இருக்கிறது என்பது.அவ்ர்கள் மதபுத்தகங்கள் குறையுள்ளவை ,எங்களது புத்தகம் மட்டும் மாறாதது என்று அவர்களையும் மடக்குவது.

இறைவன் இருக்கிற‌தா என்ற வாதம் செய்யும் போது ஆபிரஹாமிய மதத்தின் புத்தக்ங்களில் கூறப்படும் இறைவனின் இருப்பை சோதித்த்றிவதுதான் சரியாகும்.இன்று அற்விவியலில் விடை தெரியா கேள்விக்கு எல்லாம் கடவுள்தான் ,காரனம்,அதே கடவுள் மத புத்தகம் அனுப்பினான் [இதற்கு நிரூபிக்க முன் வர மாட்டார்கள் என்பதையும்,மத புத்தகங்கள் பற்றி அவர்கள் கூறும் கதைகளுக்கு அவர்களின் மூலங்களிலேயே ஆதாரம் இல்லை என்பதை நிரூபித்து உள்ளோம்] இதை அனைவரும் பின் பற்றியே ஆக வேண்டும் எனதும் நகைப்புக் குறியது.
அவர்களுக்கு சில வேலைகள்.
1. மத புத்தகங்கள் கூறும் கடவுளின் தன்மைகளை, இருப்பை,வரலாற்றை [இருந்தால் கால அட்டவணையோடு] வரையறுக்கவும்.அதனை அறிவியல் கொண்டு சோதனை செய்த சான்றுகள்.
2. இப்படி அனைத்து மதங்களுக்கும் பொதுவான‌ இறைவன் உண்டா இல்லையா என்று விவாதிப்பது மத புத்தகங்களின் படி சரி என்றால் அதனை குறிப்பிடவும்.

இந்த மத பிரச்சாரகர்கள் செய்யும் விவாதம் அவர்களின் மதபுத்தக்ங்களின் படி இருந்தால் மட்டுமே சரியாகும்.இல்லையெனில் அவர்கள்செய்வது தவறு.. 
_________________
அடுத்த பதிவில் இந்த பொது இறைவன் பற்றிய முக்கிய விவாதக் கருத்து பற்றி கூறுவேன்.

பதிவு ரொம்ப நீள்மாகிவிட்டது.இன்னும் முதல் காரணி வாதம் பற்றி ஆரம்பிக்கவே இல்லை.அடுத்த பதிவில் சொல்கிறேன்.

கடவுளை ஏன் நம்புகிறோம் என்பது பற்றிய காணொளி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக