நீங்கள் ஒரு இறை மறுப்பாளராகவோ அல்லது ஒரு மத பிரச்சாரத்தை எதிர்கொள்ளும் போது அதனை ஏன் எப்படி என்று கேட்பவராக இருந்தால் நேரடி விவாதத்திற்கு வாருங்கள் என்று அறை கூவல் விடுப்பதை கேட்டு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படி இந்த மதவாதிகள் இவ்வளவு தைரியமாக இப்படி கூப்பிடுகிறார்கள் இறைவன் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம் இதில் எப்படி விவாதித்து இறைவன் இருக்கிறாரா என்று முடிவு செய்ய முடியும் என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.அது குறித்தே இப்பதிவு.
விவாதம் என்றால் என்ன என்பதை முதலில் அறிவோம்.
**********************************
de·bate
noun,From Dictionary.com
1.a discussion, as of a public question in an assembly, involving opposing viewpoints: a debate in the Senate on farm price supports.
2.a formal contest in which the affirmative and negative sides of a proposition are advocated by opposing speakers.
3.deliberation; consideration.
***************************************
ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீது மாறுபட்ட கருத்துகளை எடுத்துரைத்தல்,இதில் நேரடி,இணைய,தொலை பேசி,தொலைகாட்சி என்று பல வகையில் நடை பெறலாம்.
என்னை பொறுத்தவரை எழுத்து பூர்வமான் விவதத்தில் கருத்தை சிதைவில்லாமல் ,மாற்றாமல் கூற இயலும்.ஆகையால்தான் எந்த சொத்திற்கும் பத்திரம் எழுதி பதிவு செய்து கையெழுத்தும் வாங்குகிறார்கள்.அதில் எழுதும் போது மாற்றம் என்றால் பெரிய வில்லங்கம் ஆகிவிடும் என்பதால் எழுத்து பூர்வமான விஷயங்களுக்கு அங்கீகாரம் அதிகம்.
இன்னும் ஒரு விஷயம் இந்த மத ச்புத்தகங்களின் சமகால புத்தக்ங்கள் கிடைத்து அதனை படித்தால் மத புத்தக்த்தில் மிகைப் படுத்திக் கூறப்பட்ட பல விஷயங்களை அறிய முடியும்.சில சம்யங்களில் மத புத்தகம் பற்றியே சர்ச்சைக் குறிய கருத்துகள் நம்ப்கமான சமகால் குறிப்புகளில் இருந்து கிடைக்கும். முரண்படும்,மாறுபடும் சம கால்க் கருத்துகளை பெரும்பாலும் மதவாதிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
பல சம கால கருத்துகள் சில மட்டும் புத்தகமாக எழுதப் பட்டு பாதுகாக்கப் பட்டதா,அல்லது அப்போது அவை ஏற்றுக் கொள்ளப் பட்டதன் காரணமாகவோ இப்போதும் கிடைப்பதுண்டு.அதனை எதிரிகள் சதி என்று பல கதை இணையத்தில் படிக்கிறோம். ஒவ்வொரு கருத்தும் ஆவணப் படுத்தப்படுவது இக்கால சிந்த்னைகளை பிறகால்த்தவ்ருக்கு எடுத்துச் சொல்லும் முயற்சி ஆகும்.இணையப் புரட்சி ஏற்பட்டதால் யாருடைய கருத்தும் ஆவணப் படுத்தக் கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளதை உபயோகப் படுத்த வேண்டுமெனில் மத கருத்துகளை விவாதங்களை எழுத்து பூர்வமாக் ஆவணப் படுத்துவது நல்லது.
இப்படி ஆவனப் படுத்தப் பட்ட கருத்துகளை 'அ' என்பவர் ,அப்போது, இதனை கூறினார்.அக்கருத்து இப்போது 'ஆ'என்பவரால் இப்படி கூறப்படுகின்றது என்பதை அறிய முடியும்.ஒரு ஆய்வுக் கட்டுரை படிக்கும் போது ஒரு பிரச்சினையை பலர் ,பல கால கட்டங்களில் எவ்வாறு அணுகிணார்கள்,அதன் சாதக ,பாதகங்கள் குறித்தும் எழுதி,இப்போது இக்கட்டுரையில் பரிந்துரைக்கும் முறை இதுவரை பின் பற்றப் பட்ட அணுகுமுறையில் இருந்து எப்படி மேம்பட்டது என்பதையும் கூறுவார்கள்.மதம் குறித்த கட்டுரைகளிலும் இம்மாதிரி அணுகுமுரை வர வேண்டும் என்பதே நம் ஆசை.
ஒரு மத பிரச்சாரகர்களிடம் நீங்கள் கூறும் கருத்தாக்கம் மதம் தோன்றிய[இது உலகம் தோன்றிய நாள் முதல் மதம் இருக்கிறது என்ற கூற்றும் சொல்வார்கள்]நாள் முதல் அப்ப்டியே இருக்கிறதா ,இல்லை காலத்திற்கு ஏற்ப பரிணமித்தா அதாவது பழையன் கழிதலும்,புதியன புகுதலும் என்று மாறியிருக்கிறதா என்று கேட்டால் என்ன சொல்வார்கள்?
இது இறைவனால் ஏற்படுத்தியது மனிதனின் கருத்திற்கே இடமில்லை.அன்று முதல் இன்றுவரை ஒரே மாதிரி இருக்கிறது,மனிதர்கள்,இன்னும் பலர்(?) சேர்ந்தாலும் இதில் ஒரு எழுத்தை கூட மாற்ற முடியாது என்பர்.பழைய பிரதி மத புத்தக்த்திற்கும்,இப்போதைய புத்தக்த்திற்கும் சில வித்தியாசங்கள் இருப்பதாக கூறுகிறார்கள் என்றால்,நாங்கள் தலைமுறை தலைமுறையாய் மனன்ம் செய்தே பரப்புகிறோம் அகவே இதை மட்டும் பாருங்கள் என்பார்கள்.இவர்கள் சொலவ்து உண்மையா பொய்யா என்பது அறிய முடியாது.இன்னும் ஒரு 100 வருடத்திற்கு முந்தைய கருத்தாக்கங்கள்,மாறுபட்ட பிரச்சாரங்கள் பெரும்பாலும் பாதுகாக்கப் படாமல்,ஒருவிதமான் அரசியல் சார்ந்த கொள்கையாக்கம் பிரச்சாரம் செய்யப் படுகின்றது.
முந்தைய கருத்தாக்கங்கள் அனைத்தும் தவறு,வேண்டுமென்றால் விவாதத்திற்கு வரமுடியுமா? என்பார்கள்.மேற்கூறிய நாம் கூறிய கருத்துகளை அசை போட்டால் இந்த நேரடி விவாதம் என்பது எப்படி இருக்கும் என்பதை புரிந்து கோள்ளலாம்.இந்த விவாதங்களில் மதங்கள் பற்றி அதன் ஆதார மூலங்கள்,வரலார்று ரீதியான கருத்தாக்க மாற்றங்கள் என்று அறிவியல் பூர்வமாக விவாதிக்க மாட்டார்கள்.இன்று இப்போது நான் சொல்லும் விளக்கம் மட்டுமே சரியாது என்று பேசுவார்கள்.அங்கே அவர் அப்ப்டி சொன்னார் என்றால்,இதுதான் சரி,அவர் பெரிய ஆளுங்க என்று சொன்னால் அதுவும் சரி,இதுவும் சரி என்பார்கள்.இந்த நேரடி விவாதங்களே ஒரு நகைச்சுவையான பொழுது போகே தவிர வேறொன்றுமில்லை.
**************
இந்த நேரடி விவாதங்களின் அடிக்கடி நடப்பது இறைவன் உண்டா இல்லையா என்பதாகும்.இதனை சென்ற பதிவில் சிறிது ஆய்வு செய்தோம் என்றாலும் இதில் ஒரு முதல் காரணி விவாதம்என்பதையும் இதனை எப்படி பயன் படுத்துகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
முதல் காரணி கொள்கை என்றால் என்ன?
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணி[cause] உன்டு.காரணி இல்லாமல் ஒன்றும் நடக்க முடியாது.பிரபஞ்சம் ஒன்று இருந்தால் அதனை படைத்தவர் என்று ஒருவர் உண்டு.ஆக்வே இறைவன் இருக்கிறார்.அப்போது இறைவனை படைத்தவ்ர் யார்? என்றால் நம்மை எள்ளி நகையாடி இறைவனுக்கு இது பொருந்தாது என்றும் இருப்பவர் என்று சொல்வார்கள்
.
இதனை கூறுபவர்கள் சொந்த சரக்கு போல் கூறுவதும்,அவரது சிஷ்யர்கள் ஆஹா நம்து குரு என்னே அபாரமாக் வாதிடுகிறார் என்று மெய் மற்ப்பதும் இயல்பான விஷயங்கள். இந்த ஆச்சரியத்தினால்தான் யாரை பார்த்தாலும் நேருக்கு நேர் வருகிறாயா என்றழைப்பது. சரி இந்த முதல் காரணி கருதுகோள் தத்துவத்திற்கே திரும்பி வருவோம்.இந்த முதல் காரணி கருதுகோள் முதலில் பிளாட்டொ (c. 427–347 BC) ,அர்ஸ்டார்டில்(c. 384–322 BC),மற்றும் தாமஸ் அக்கினோ[ 1225 – C.E 1274).ஆகியோர்களால் உருவாக்கி ,பண்படுத்தப்பட்டது.ஆக்வே இந்தக் கொள்கை மிகப் ப்ழமையானது என்பதையும், இதனை பண்படுத்திய சரித்திர தத்துவ நாயகர்களை மேற்கோள் காட்டாமல் சொலவ்து தவறு.
இன்னும் இந்த கொள்கையில் பல மாறுபட்ட வகைகள் உண்டு,ஒவ்வொன்றும் ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பின் போதும் பரிணமித்தது என்பதை அறிதல் நலம்.பிரபஞ்சம் தோன்றியதுபெரு வெடிப்பின்[Big Bang Theory] மூலம் என்பதே இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரபஞ்ச தோற்ற கொள்கை[Orgin of universe]. .நம்ம மதவாதி அண்ணாச்சி ஒரே போடாக பெரு வெடிப்பிற்கு காரணம் என்ன?அதனை வெடிக்க வைத்ததே எங்க இறைவன்தான் என்று அனைவரையும் புல்லரிக்க வைத்து விடுவார்.அடேயப்பா இவரை இறைவன் எப்படி பயன்படுத்துகிறான் பாருங்கள் என்று மெய் மறப்பர் சிஷ்யர்கள்.
_________
சரி நாம் இப்போது இதனை ஆய்வு செய்வோம்.
பெரு வெடிப்பு கொள்கை என்றால் என்ன?
பெரு வெடிப்பு கொள்கை பிரபஞ்சம் எப்படி தோன்றியது பற்றிய அறிவியலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பற்றிய இப்போதைய கருது கோள் ஆகும். பொ.ஆ 1927ல் ஜார்ஜ் லாமெடர் என்ற பெல்ஜியத்தை சேர்ந்த,கத்தோலிக்க மதகுரு மற்றும் ஆய்வாளரால் வரையறுக்கப் பட்டது.மிக அதிக வெப்பமும்,மிக அதிக அடர்த்தியும் கொண்ட ஒரு வினோத ஓர்மைப் புள்ளி[singularity) அணுவில் இருந்து 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விரிவடைய ஆரம்பித்து பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் இக்கொள்கை.
திடிரென்று வெடிப்பு ஒன்றும் ஏற்படவில்லை,ஒரு பலூன் ஊதினால் என்ன நிகழுமோ அதுபோல் நிகழ்ந்து கொண்டிருப்பது.இக்கொள்கை எப்படி சரி என்று கருதப்படுகின்றது என்றால் இரு வேறு கால கட்டங்களில்நட்சத்திர மண்டலங்களுக்கிடையே உள்ள தூரம் அதிகரிப்பதும்,வெப்பம் குறைவதை வைத்து ஒரு கால கட்டத்தில் அனைத்துமே ஒரு வினோத ஓர்மை புள்ளியில் இருந்திருக்கலாமோ என்ற கண்க்கீட்டில் உறுதிப் படுத்தப்பட்டது. இன்னும் சிலகருதுகொள்களும்'[hypothesis] போட்டியில் இருக்கின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எந்த மத புத்தக்த்திலும் இறைவன் வானங்களையும்,பூமியையும் படைத்து முடித்து விட்டார்.இங்கே முதல் க்ஷனத்தில் நடந்தது போலவே இப்போதும் நடகின்றது ஆகவே இந்த பெரு வெடிப்பு கொள்கை மத புத்தகங்களில் கூறப்படும் இறைவனின் படைப்பை வழி மொழிகிறதா என்பதை யோசிக்கலாம்.
சரி பெரு வெடிப்பு என்பதை விட தமிழில் பெரும் விரிவடைதல் கொள்கை என்பதே பெயர் சரியாக இருக்கும்.
***********
இப்போது திருப்பி நம் முதல் காரணி கொள்கைக்கு வருவோம்.
மதவாதிகள் என்ன கூறுகிறார்கள்,இந்த ஒரு புள்ளியில் இருந்து விரிவடைய செய்து கொண்டிருப்பவர் இறைவன்(கள்) என்கிறார்கள்.இது அறிவியலின் படி அந்த புள்ளிக்கு முன் வெளி(இடம்),காலம் இல்லை.அங்கிருந்துதான் இரண்டும் ஆரம்பிக்கின்றன.அந்த வினோத ஓர்மை புள்ளி[singularity] என்பதும் ஒரு பொருள்.அதற்கு வெளியில் இருந்து இறைவன் என்னும்சக்தி என்பது அறிவியலின் படி தவறு.அந்த புள்ளியில் உள்ள மிக அதி சக்தி(அதி வெப்பம்+அதி அடர்த்தி) அத்னை விரிவடைய செய்கிறது என்பதும் ஒரு குறிப்பிட்ட அள்விற்கு விரிவடைந்ததும் பின்திருப்பி சுருங்கி பழைய நிலைக்கு வந்துவிடும் என்பதும் இக்கொள்கையின் அம்சங்களே.இத்னை மத புத்தகங்கள் ஏற்காது.ஆக சுருங்குவதும் விரிவதும் ஒரு முடிவற்ற செயல் என்ற் கருத முடியும்.நாம் முதல் விரிவாக்த்தில்தான் இருக்கிறோம் என்று அறுதியிட்டு கூற இயலாது.
Big crunch(End of Big bang)
Big crunch(End of Big bang)
இப்படி பிரபஞ்சத்தில் 0.000001% பூமியில் உள்ள மனிதனுக்காக் இப்படி பிரபஞ்சம் விரித்து சுருக்குவது அவ்வளவு திறமையுள்ள படைப்பாளி செய்யும் வேலை அல்ல.பிரபஞ்சம் நிலையானது என்பதும் எண்ணற்ற முறை விரியும் சுருங்கும் என்பது ஒரே மாதிரியே.ஒருவேளை அந்த சக்தி தீர்ந்து விட்டால அப்ப்டியே நின்றும் விடலாம்.ஆக நடைமுறையில் உல்ள பல் மதங்களின் படைப்பு கொள்கைக்கு இது ஒத்து வராது. பெரும் விரிவாக கொள்கையை முதல் காரணி வாதத்திற்கு பயன் படுத்த ஒரு புது மதம் உருவாக்கப் பட்டால் அதற்கு உபயோகப் படலாம்.இக்காணொளி பாருங்கள் இவர்கள் வேறு முறையில் பிரச்சினையை அணுகுகிறார்கள்.
முட்டாள் நாத்தீகவாதிகளே பதிலளியுங்கள் ....
பதிலளிநீக்குஇறைவன் இந்த உலகை உருவாக்கவில்லை, உயிர்களையும் உருவாக்கவில்லை, இந்த உலகம் தானாக வந்ததாக கூறும் நாத்திகவாதிகள் கூறும்....
* பெரு-வெடிப்பு கொள்கை,
* ஹிக்ஸ் போஸான் (கடவுள் துகள்) கொள்கை,
* டார்வின் பரிணாம கொள்கை,
* மில்லரின் கொள்கைகள் ....
இப்படி பல கொள்கைகளை சொல்றாங்க ....
இவைகள் கொள்கைகள் தன ஒழிய விதிகள் அல்ல. இரண்டிற்கும் பெரும் வித்தியாசங்கள் உள்ளன.
ஆனால், இந்த கொள்கைகளையே நிரூபித்த விதிகளாக நம்பும் நாத்திகவாதிகளை முட்டாள் என கூறலாமே !
எந்தவொரு விஞ்ஞான ஆராய்ச்சியாக இருந்தாலும், அது முதலில் கொள்கை வடிவில் உருவாக்கப்பட்டு, அதன் பின்னர் செயல்வடிவம் கொடுக்கப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டும். அப்போது மட்டுமே அந்த விஞ்ஞானம் விஞ்ஞானமாக ஏற்கப்படும். இல்லாவிடில், அது வெறும் கற்பனையாகவே தொடர்ந்து இருக்கும்.
உதாரணமாக, நியூட்டனின் இயற்பியல் கண்டுபிடிப்புகள் முதலில் கொள்கைகளாக வடிக்கப்பட்டு, பின்பு ஆராய்ச்சிகளின் மூலமாக நிரூபிக்கப்பட்டு, விதிகளாக மாற்றம் பெற்றன. கொள்கைகள் விதிகளாக மாறிய பின்னரே (அதாவது நிரூபிக்கப்பட்ட பின்னரே) அவை அறிவியலாக ஏற்கப்படுகின்றன. நிரூபிக்கப்படாவிடில் அவை வெறும் கொள்கைகளாகவே இருக்கின்றன.
ஒருவர் ஒரு கொள்கையைக் கூறலாம், மற்றவர் மற்றொரு கொள்கையைக் கூறலாம், கொள்கை என்பது ஓர் அபிப்பிராயமே தவிர நிதர்சனமான உண்மையல்ல.
எனவே, இப்படி நிரூபிக்கப்படாத உலகம்,உயிர்கள் உருவாக்கத்தை வைத்து இறைவன் இல்லை என வாதாடும் நாத்திகவாதிகள் எப்போது இந்த உண்மைகளை அறியப்போகிறார்கள் ?
இறைவன் என்பதை இல்லையென் நீங்களே நான் கேட்ட கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் நிரூபிக்கலாமே ! உலகம், உயிர்கள் தானாகவே வந்தது என்பதை அறிவியல் நிரூபித்துவிட்டாலே போதுமே! இறைவன் இல்லையா ஆகிவிடுகிறதே ! அப்புறம் எங்களுக்கு வேலையே இல்லையே !
இப்படி நீங்கள் நிரூபித்துவிட்டால் நாங்களும் உங்கள் கொள்கைக்கே வந்துவிடுவோம் அல்லவா ?
உலகின் டாப்-10 அறிவியல் அறிஜர்கள் - டார்வின் பரிணாம கொள்கை தவறு என்கிறார்கள்...
பதிலளிநீக்குடிஎன்ஏ இயற்கை தேர்வு மூலம் ஒரு புதிய இனங்கள் மாற்ற முடியாது.
தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் அதே செயல்முறை மலர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் செய்யப்படுகிறது. இனங்கள் புதிய வேறுபாடுகள் சாத்தியம், ஆனால் ஒரு புதிய இனங்கள் அறிவியல் மூலம் உருவாக்கப்பட்டது.
உண்மையில், மிக நவீன ஆய்வகங்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் காணப்படும் ஒரு இடது கை புரதத்தை உற்பத்தி செய்ய இயலாது. பரிணாமவாதிகள் எந்த வகையிலும் எந்த வகையிலும் பரிணாம வளர்ச்சியுற்றதாக நிரூபிக்கப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டனர். பரிணாமம் வெறுமனே விஞ்ஞான ஆதாரமின்றி பை-ல்-வானத்தில் உந்துதல்.
http://www.biblelife.org/evolution.htm