சனி, 17 டிசம்பர், 2011

வளிமண்டலத்தின் உச்சியில் சில உயிரினங்கள்.

 




இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 26.7 மில்லியன் கன அடிகள் கனவளவுள்ள பலூன் ஒன்றை பூமியின் காற்றுமண்டல உச்சிக்கு (upper stratosphere) அனுப்பி நடத்திய ஆய்வுகளில் இருந்து புறஊதாக் கதிர்ப்புக்களை (UV radiation) தாங்கி வாழக்கூடிய 3 புதிய இன பக்ரீரிய (bacteria) வகை நுண்ணங்கிகளைக் கண்டுபிடித்துள்ளது.

குறித்த பலூன் பூமியின் வளிமண்டலத்தில், பூமியின் மேற்பரப்பில் இருந்து 20 தொடக்கம் 41 கிலோமீற்றர்கள் உயரத்தில் பறந்து காற்றில் உள்ள மாதிரிகளைத் திரட்டியுள்ளது.

இதன் போது மொத்தமாக 12 பக்ரீரிய இனங்களும் 6 பங்கசு இனங்களும் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 3 பக்ரீரிய இனங்கள் மட்டும் புதிய இனங்களாக இனங்காணப்பட்டுள்ளன.

இந்தக் கண்டுபிடிப்பானது பூமிக்கு வெளியில் இருந்துதான் இந்த நுண்ணங்கிகள் வந்தன என்ற முடிவுக்கு செல்ல உதவக்கூடியதாக இல்லை என்றாலும் பூமியில் எவ்வாறு உயிரினங்கள் தோன்றின என்ற கண்டறிதலுக்கு உதவியாக இருக்கும் என்று இஸ்ரோ தகவல்கள் கூறுகின்றன.

இதே போன்ற ஒரு ஆய்வை 2001 இலும் இஸ்ரோ நடத்தி இருந்தது. அந்த ஆய்வின் தொடர்சியாக இரண்டாம் படிநிலையில் இவ்வாய்வு நடத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக