வியாழன், 15 டிசம்பர், 2011

சாத்தான் (Satan) என்பவன் யார்?



சாத்தான் என்பவன் யார்?



சாத்தானைப் படைத்தது கடவுளா?



சாத்தானைப் படைத்தது கடவுள் என்றால் மனிதனைப் படைத்ததும் கடவுள் என்றால் சாத்தானும் மனிதனும் சகோதரர்களா?



படைத்த கடவுளுக்கே அல்வா குடுக்கும் சாத்தான் கடவுளுக்கு இணையானவனா? (அட்லீஸ்ட் கடவுள் ஏமாந்த சில தருணங்களில்)



மனிதனைப் படைத்து அவனை முட்டாளாகவே வைத்துக் கொள்ள கடவுள் நினைத்து சில கட்டளைகளை இட்டபோது அதை மீற சொன்ன சாத்தானை கடவுளால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?



சாத்தான் ஏன் ஒரு ஏவாளிடம் சென்று கடவுளின் கட்டளையை மீற சொல்கிறான்? ஏன் ஆதாமிடம் சொல்லவில்லை?





சாத்தான் ஏவாளை ஏவி விட்டு, அவள் அந்த பழத்தை சாப்பிட்டதினால் ஆதாமிற்கும் ஏவாளிற்கும் இனக்கவர்ச்சி ஏற்பட்டு, உடலுறவு கொண்டு மனித இனத்தை தழைக்க செய்தனர். அப்படியென்றால் சாத்தான் தானே மனித இனத்தின் வணக்குத்துகுரியவனாக இருக்கமுடியும்? மனிதன் கடவுளை ஏன் வணங்குகிறான்?



சாத்தானை ஏன் கடவுள் இன்னும் அழிக்கவில்லை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக