வியாழன், 15 டிசம்பர், 2011

இந்து மதத்தின் இறை தூதுவர்இந்த தலைப்பில் சுவன்ப்ரியன் ஒரு பதிவிட்டிருந்தார். அதை பற்றி விவாதங்கள் நடந்தன. நானும் பங்கு கொள்ளலாம் என இருந்தேன். சந்தில் சிந்து பாடும் நான் கும்பலில் கோவிந்தா போடுவதில்லை.

முதலில் இந்து மதத்திற்கு தூதுவர்.. ..........இந்த கான்செப்டே தப்பு.
அவர் முகமதிய மதத்தை ஒரு பெஞ்ச் மார்க்காக வைத்து கேள்விகள் கேட்கிறார். அதுவே தவறு. .

சரி விஷயத்திற்கு வருவோம்.

இணைய இஸ்லாமிஸ்ட்களின் இந்துமத மற்றும் வேத அறிவு என்னை பலமுறை வியப்பில் ஆழ்த்திள்ளது.

எப்படி இது சாத்தியம் என நான் ஒருவரிடம் கேட்க போக அவரும் கூகுளில் தேடவும் அதில் இந்து மத குப்பைகள் நிறைய உள்ளன என்றார்.

நானும் கூகுளில் தேட போக இந்துமத குப்பைகளை மட்டும் அவர்கள் கண்ணுக்குத் தெரிய அதன் பக்கத்தில் உள்ள முகமதிய மதத்தின் குப்பைகள் என் கண்ணுக்கு தெரிந்தது. சரி நானும் குப்பைகளை அள்ளி வீசலாம்.

ஐயோகோ நான் செய்வது வேறு தொழில் அல்லவா.

ஆகையால் இந்த குப்பைகளை கிளறும் தலைவர் யார் என்று பார்த்தேன். இவர் எனக்கு அறிமுகமானவர்தான். இவர் பெயர் Dr. ஜாகிர் நாயக். இவர் எம்.பி.பி.எஸ் படித்தவர். பம்பாயில் உள்ளவர். (சிலபேர் எம்.பி.பி.எஸ் படித்து விட்டு வேறு வேலைப் பார்த்து கவர்மெண்ட் பணத்தை வீணடிப்பர். இவரைப் போல் இன்னொருவர் தமிழ் நாட்டில் டாக்டர் மாத்ருபூதமுடன் சேர்ந்து புதிரா புனிதமா என்ற நிகழ்சிகளை நடத்திய Dr.சர்மிளா.)

Dr. ஜாகிர் நாயக் குர்ரானை வலமிருந்து இடமாகவும் இடமிருந்து வலமாகவும் படித்தவர்.

அந்த வசனங்களை மனதில் நிறுத்தியவர். எப்போது வேண்டுமென்றாலும் சக்.... சக் என்று நின்ஜா வீரர் நட்சத்திரங்கள் வீசுவது போல் குரான் வசனங்களை வீசுவார். அவர் தான் நம் இணைய இஸ்லாமிஸ்ட்டுகளின் friend, philospher and guide அவர் இடுப்பில் இருந்து தான் இவர்கள் சுடுவார்கள்.

இணைய இஸ்லாமிஸ்ட்கள் கையில் இந்தமதத்தின் நான்கு வேதப் புத்தகங்கள் இருக்கும் என நம்பிய நான் ஒரு முட்டாள். இவர்கள் இருப்பது சவூதி அல்லவா

இந்தமாதிரி இந்து வேதங்களை இஸ்லாமிஸ்ட்கள் அங்கே படித்தால் அவர்களின் தாடி எவ்வளவு நீளமாக் இருந்தாலும் அவர்களுக்கு உடனே டிபோர்டேஷன் தான்.

Dr. ஜாகிர் நாயக்கும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களும் சேர்ந்து "Concept of God in Hinduism and in Islam" என்ற ஒரு நிகழ்சியை நடத்தினார்கள். அதை ஏற்பாடு செய்தது ஒரு இஸ்லாமிய அமைப்பு. பங்கு கொண்ட மக்களில் பெரும்பாலோர் முகமதிய்ர்கள். இந்த நிகழ்சியின் ஒலிப்பதிவு எனக்கு கிடைத்தது. இருவர் பேசியதும் எனக்கு தூக்கத்தை வரவழைத்தது. அதிலும் டாக்டரின் டார்ச்சர் தாங்க முடியவில்லை. இந்து மதத்தின் இந்த புத்தகத்தில் இந்த பக்கத்தில் இந்த வரிகளை பார் என கேப்டன் ரேஞ்சுக்கு புள்ளி விவரங்களை பட்டியலிட்டார். எல்லா இந்துமத புத்தகத்திலும் முகமதுவைப் பற்றி கூறியிருக்கிறார்கள் அதனால் நாங்க தான் டாப்பு என சொல்லவும் கரகோஷம் வானைப் பிளந்தது. அந்த சத்ததில் "உங்க முகமதுவை பற்றி சொன்ன எங்க வேதங்களையும் மதியுங்கள்" என்ற ஸ்ரீஸ்ரீயின் வார்த்தைகள் யாருக்கும் கேட்கவில்லை.


இந்த நிகழ்ச்சியின் கேள்விபதில் பகுதிதான் சிறப்பானது.

அதில் ஒரு பெண்மணி கேட்ட கேள்வியை கீழே உள்ள வீடியோவில் கேட்கலாம்( ஆடியோ கிளிப்பை எப்படி அப்லோட் செய்வது என தெரியாமல் அதை வீடியோவாக மாற்றி ஏற்றியுள்ளேன்)


Dr. ஜாகிர் நாயக்கிடம் ஒரு இஸ்லாமிய பெண்மணியால் கேட்கப்பட்ட கேள்வி "நான் ஸ்ரீஸ்ரீ அவர்களின் சுவாசப் பயிற்ச்சியை பயின்று இறைவனுடன் இரண்டர கலக்கும் உணர்வை பெற்றிருக்கிறேன். அதற்கு நன்றி. இறைவன் எங்கும் நிறைந்தவன் (omni-present) என்கிறார்களே அதைப் பற்றி குரான் என்ன சொல்கிறது?"

அதற்கு Dr. ஜாகிர் நாயக் " குரானிலோ ஹதீஸ்லோ எங்குமே இறைவன் எங்கும் நிறைந்தவன் என்று சொல்லவில்லை. ஒரு முறை முகமது ஒரு வயதான் பெண்மணியிடம் கடவுள் எங்கே உள்ளார் என கேட்க அவர் வானததைக் காட்டினார். நீ பாஸ் என முகமது மார்க் போட்டுவிட்டார். கடவுள் எங்கும் நிறைந்தவன் என்று எந்த இடத்திலும் குரானில் பேசவில்லை. இதைப் பற்றி மேலும் விவாதம் செய்ய தேவையில்லை" என முடித்துவிட்டார்"

வானத்தில் அமர்ந்துக் கொண்டு அவ்வப்போது தூதுவர்களை அனுப்பி வேதங்களை பப்ளிஷ் செய்யும் இறைவன் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கடைசி ஆளை அனுப்பி கடைசி புத்தகத்தை வெளியிட்டுவிட்டு கடையை மூடிவிட்டார் என்பது காஃபிரல்லாதவரின் நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு இந்துமதத்தின் சிபாரிசும் தேவைபடுகிறது

"உனை எனதுள் அறியும் அன்பை தருவாயே" என உருகிய அருணகிரிநாதரின் வார்த்தைகளில் என்னை போன்ற காஃபிர்களின் நம்பிக்கை

இறந்தபிறகு கடவுளுடன் ஜாலியாக பார்ட்டி செய்யவேண்டுமென்பது காஃபிரல்லாதவரின் நம்பிக்கை

அந்த கடவுளாக மாறி அவருடன் கலப்பது என்பது என்னை போன்ற காஃபிர்களின் நம்பிக்கை

ஒரு புத்தகத்தில் காலை முதல் இரவு வரை ஆண் என்ன செய்யவேண்டும் பெண் என்னசெய்யவேண்டும் என உத்திரவிடுவது காஃபிரல்லாதவரின் கடவுள்

நீ நானாக் இரு. நானும் நீயும் வேறல்ல என்று அன்பை பிழிவது காஃபிர்களின் கடவுள்

உன்னிலும் என்னிலும்
தூணிலும் துரும்பிலும்
நேற்றும் இன்றும் என்றும்
இருப்பவன் இறைவன்.
அடியும் முடியும்
இல்லாத இறைவன்
முற்றுப் புள்ளிகளை
என்றும் வைப்பதில்லை
மனிதனே கடவுள்
மனிதமே மதம்

யோவ்... அது சரி இந்து மதத்தின் தூதுவர் யாரு அத்த சொல்லுவியா ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக