ஆரம்பத்தை நோக்கி: பகுதி 6
4. ஹப்ஸா
உமர் அவர்களின் மகள். கிபி 607 ல் பிறந்தார். இவரது தந்தை உமரின் கூற்றுப்படி இவர் அழகு குறைந்த பெண்மனியாக அறியப்படுகிறார். உஹது போரில் தன் கணவர் ஹூனைதை இழந்தார். உமர், விதவையான தன் மகளை மறுமணம் செய்து கொள்ள உத்மான் மற்றும் அபூபக்கர் சித்தீக் இருவரிடமும் வேண்டுகோள் வைக்ககிறார் ஆனால் அவர்களோ ஹப்ஸாவை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்ய விரும்புவதை உணர்ந்து மறுப்பு தெரிவிக்கின்றனர்.புஹாரி ஹதீஸ் -4005
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் (தம் மருமகன்) குனைஸ் பின் ஹூதாஃபா (ரலி) அவர்கள் இறந்து விட்டதால் (மகள்) ஹப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொருவருக்கு திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்) குனைஸ் பின் ஹூதாஃபா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ரு போரில் கலந்து கொண்டவருமாயிருந்தார்கள். மேலும் மதீனாவில் இறந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், எனவே நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து (என் மகள்) ஹப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறி, நீங்கள் விரும்பினால், என் மகள் ஹப்ஸாவை உங்களுக்கத் திருமணம் செய்து வைக்கிறேன். (அதற்கு) உஸ்மான் (ரலி) அவர்கள் (உங்கள் மகளை நான் மணம் புரிந்து கொள்ளும்) இந்த என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது என்று சொன்னார். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு (நான் உஸ்மானை சந்தித்த போது) இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றே எண்ணியுள்ளேன் என்று கூறினார்கள். ஆகவே நான் அபூபக்கர் அவர்களைச் சந்தித்தேன் (அவர்களிடம்) நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவை உங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன் என்று கூறினேன். அபூபக்கர் அவர்கள் அமைதியாக இருந்தார்கள் எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே உஸ்மான் அவர்களை விட அபூபக்கர் அவர்கள் மீதே மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை பெண் கேட்டார்கள். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவை திருமணம் செய்து வைத்தன். பிறகு (ஒரு நாள்) அபூபக்கர் அவர்கள் என்னைச் சந்தித்த போது நீங்கள் என்னிடம் ஹஃப்ஸாவைக் குறித்து சொன்ன போது நான் உங்களுக்கு பதில் எதுவும் கூறாததால் உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக் கூடும் என்று கூறினார்கள். நான் ஆம் என்று கூறினேன். (அதற்கு அபூபக்கர் அவர்கள்) நீங்கள் கூறிய போது பதில் கூறாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணம் புரிந்து கொள்வது) பற்றி பேசியதை நான் அறிந்திருந்தேன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை. (எனவேதான் உங்களுக்கு பதிலேதும் கூறவில்லை நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால் உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன் என்று கூறினார்கள்.
கிபி 625 நபி (ஸல்) அவர்கள் ஐம்பத்தி ஆறாம் வயதில் ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் அரசியல் காரணங்களுக்காவே நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் வலிமையான உமரின் ஆதரவைத் தக்கவைத்துக் கொண்டார். ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் நெருங்கிய தோழிகள். தங்களது கருத்துக்களை நபி (ஸல்) அவர்களுடன் விவாதிக்க தயங்காதவர்கள். ஒருமுறை, குடும்ப ரகசியம்(?)வெளியான விவகாரம் தொடர்பாக முஹம்மது நபியுடன் ஹப்ஸா செய்த விவாதம் காரணமாக அவரை மணவிலக்கு செய்தார். அங்கு இறங்கிய ஜிப்ரீல் அவர்கள் ஹப்ஸாவை மணவிலக்கிலிருந்து மீட்க கோருகிறார். நபி (ஸல்) அவர்களும் அதை ஏற்று ஹப்ஸாவுடன் இணைந்து வாழ்ந்தார் (இதைப் பற்றி விரிவாக பின்னர் காண்போம்). இவர் எட்டு ஆண்டுகள் நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தார். இவர் தன்னுடைய அறுபத்தது மூன்றாம் வயதில் காலமானார்.
5. ஜைனப் பின்த் குழைமா
ஹிஜ்ரி நாலாம் ஆண்டில் இவரைத் தன் ஐம்பத்தி ஆறாம் வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருடைய முதல் கணவர் பத்ரு போர் களத்தில் இறந்தவர். இவர் தானே முன்வந்து நபி (ஸல்) அவர்களுக்காக தன்னை அர்பணித்ததார். அனாதைகளிடமும் ஏழ்மையானவர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டவர். திருமணம் நிகழ்ந்து எட்டு மாதங்களில் மரணமடைந்தார்.
6. உம்முஸல்மா
ஹிஜ்ரி நாலாம் ஆண்டில் இவரைத் தன் ஐம்பத்தி ஆறாம் வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருடைய முதல்கணவர் அப்துல்லா பின் அப்துல் அஸத் உஹது போரில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இறந்தவர். இத்தா காலத்திற்கு பிறகு அபூபக்கர் சித்தீக் மற்றும் உமர் இவர்களும் உம்முஸல்மாவை மறுமணம் செய்ய நாடுகின்றனர் ஆனால் மறுத்துவிடுகிறார். நபி (ஸல்) அவர்களின் முயற்சி வெற்றியடைகிறது. நபி (ஸல்) அவர்கள் உம்முஸல்மாவைத் திருமணம் செய்யும் வேளையில் இவருக்கு ஏழு வயதில் ஆண் குழந்தை இருந்ததாக காணப்படுகிறது. மிக அழகானவர். அறிவு கூர்மை நிறைந்தவர் என்பதால் சிக்கலான நேரங்களில் நபி (ஸல்) அவர்கள் இவரது அறிவுரை நாடுவது வழக்கம். ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு இறந்தார்.
7. ஜைனப் பின்த் ஜஹ்ஷ்
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையில் ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு, நபியவர்களின் ஐம்பத்து எட்டாம் வயதில், ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் அவர்களை ஆறாவது மனைவியாக திருமணம் செய்தார்கள். இவரைப் பற்றியும் விரிவாக பின்னர் காண்போம்.
8. ஜுவேரியா
Bukhari vol 3, Book 46, No. 717
Narrated Ibn Aun:
Prophet had suddenly attacked Banu Mustaliq without warning while they were heedless and their cattle were being watered at the places of water. Their fighting men were killed and their women and children were taken as captives; the Prophet got Juwairiya on that day.
பனூ முஸ்தலிக் இனத்தவர்களின் மீது அவர்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தி நபி (ஸல்) அவர்களின் படை எளிதில் வெற்றி பெறுகிறது. இப்போரில் பனூ முஸ்தலிக் இனத்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர். சுமார் 600 பேர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அவர்களனைவரும் அடிமைகளாக்கப்பட்டனர். சுமார் 2000 ஒட்டகங்களும், 5000 கால்நடைகளும், ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அக் கைதிகளில் ஜுவேரியா பனூ முஸ்தலிக் இன தலைவரின் மகளும் ஒருவர். பனூ முஸ்தலிக்போரில் இவருடைய கணவர் முஸாஃபி பின் ஸஃப்வான் நபி (ஸல்) அவர்களின் படையினரால் கொல்லப்பட்டு, ஜுவேரியா போர் கைதியாக பிடிக்கப்பட்டார். போரில் கிடைத்த பொருட்களை (கைதிகள் உட்பட) தன்னுடைய படையினருக்கு நபி (ஸல்) அவர்களால் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஜுவேரியாவை, தாபித் பின் கைஸ் என்ற படைவீரருக்கு அடிமையாக பங்கீடு செய்யப்படுகிறார். தலைவரின் மகள் என்ற உயர்ந்த நிலையில் தன்னை ஒரு சாதாரண போர்வீரனின் அடிமையாக்கப்பட்டதை நினைத்து மிகுந்த வேதனையடைந்தார்.
தன்னுடைய நிலைமையை கூறி, தாபித் பின் கைஸ்க்கு பணயத்தொகை அளிப்பதன் மூலம் தன்னுடைய விடுதலையை நாடுகிறார். தன்னை பாதுகாப்பாக விடுதலை செய்ய நிறைய பிணைத்தொகை கேட்பார்கள் என அச்சமடைகிறார். தாபித் பின் கைஸும் கோரிக்கையை ஏற்கிறார். போரில் தங்களுடைய செல்வங்கள் முஸ்லீம்களின் வசமானதால், மற்றவர்களின் உதவியால் பணயத்தொகையை திரட்ட நினைக்கிறார்.
போரில் கிடைத்த அடிமைகள் மற்றும் இதர பொருட்களுடன் நபி (ஸல்) அவர்களின் படை மதீனா திரும்புகிறது. இந் நிலையில் ஜுவேரியா தன்னை காப்பாற்றிக்கொள்ள நபி (ஸல்) அவர்களை சந்தித்தால் ஏதேனும் எதிர்பாராத உதவி கிடைக்கலாம் என நினைத்து, நபி (ஸல்) அவர்களை சந்திக்க அனுமதி கேட்கிறார். ஜுவேரியா இருபது வயது நிரம்பிய அழகிய பெண். நபி (ஸல்) அவர்களுடன் ஜுவேரியாவை காண்பதை ஆயிஷா விரும்பவில்லை. பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு நிகழ்ந்த பேச்சுவார்தையில், ஜுவேரியா விரும்பினால் நபி (ஸல்) அவர்களைத் திருமணம் செய்யலாம் என்ற வேண்டுகோளுடன் அவர் மட்டும விடுதலை செய்யப்படுகிறார். பிறகு நபி (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார். பாரா என்ற அவரது இயற்பெயரை ஜுவேரியா என்று நபி (ஸல்) மாற்றினார்.
நபி (ஸல்) அவர்களின் மனைவியின் (ஜுவேரியா) உறவினர்களையும் அவரது ஆட்களையும் அடிமைகளாக வைக்க முடியாமல், வேறு வழியில்லாமல் போரில் கிடைத்த அடிமைகள் மற்றும் இதர பொருட்கள் பனூ முஸ்தலிக் வசம் திருப்பித் தரப்பட்டதாக இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் பனூ முஸ்தலிக்கின் உடைமைகளை அவர்கள் வசம் திருப்பி கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் வரலாற்றில் கணப்படவில்லை. ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு நபி தன்னுடைய ஐம்பத்து எட்டாம் வயதில் ஜுவேரியாவைத் திருமணம் செய்து கொண்டார். ஹிஜ்ரி 50 ம் ஆண்டு தன்னுடைய 65 ம் வயதில் ஜுவேரியா காலமானார்.
இத் திருமணம் பனூ முஸ்தலிக் இஸ்லாமை ஏற்க காரணமாக இருந்தது. ஜுவேரியாவின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இத் திருமணம் நிகழ்ந்தது எனவே இத்திருமணத்தை விமர்சிப்பது முட்டாள்தனமானது என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கம்.
இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கத்தின் படி நபி (ஸல்) – ஜுவேரியா இடையே நிகழ்ந்த உடன்பாடு, ஜுவேரியாவை மட்டுமே விடுதலை செய்தது. அவரது உறவினர்களையும், அவரது நலம் விரும்பிகளையும் செல்வங்களை விடுதலை செய்யவில்லை. தன்னைச் சார்ந்தவர்களைக் காப்பாற்ற, ஜுவேரியா தேர்ந்தெடுத்த வழி; நபி (ஸல்) திருமணம் செய்வது என்ற முடிவு. ஜுவேரியா தன்னைக் கொடுத்து தன் இனத்தை சேர்ந்த மற்றவர்களை காப்பாற்றினார் என்று முடிவு செய்யலாம். கணவனைக் கொல்வதும் மனைவியயை அபகரிப்பதும் நபி (ஸல்) அவர்களின் பெருந்தன்மை.
9. உம்மு ஹபீபா
நபி (ஸல்) அவர்களுக்கு மிகப் பெரிய எதிரியாக விளங்கிய அபூ ஸூஃபயானின் மகளாவார். நபி (ஸல்) அவர்களை விட இருபத்து மூன்று வயது இளையவர். அபிஸீனீயா சென்ற இவரது கணவர் உபைதுல்லா அங்கு கிருஸ்தவராக மதம் மாறினார் கணவருடன் வாழவிரும்பாததால் அபிஸீனீயாவில் தன் மகளுடன் தனிமையில் வாழ்ந்து வந்தார். ஹிஜ்ரி ஒன்றாம் ஆண்டு நபி (ஸல்) அவர்களால் திருமணம் செய்யப்பட்டார். ஆனால் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டுதான் நபி (ஸல்) அவர்களுடன் இணைந்து வாழ்ந்தார் அப்பொழுது நபி (ஸல்) அவர்களுக்கு அறுபது வயது. கலீபா முவாவிய இவரது சகோதரர். ஹிஜ்ரி 44 ம் ஆண்டு தன்னுடைய 72 ம் வயதில் காலமானார்.
10. ஸஃபியா
நபி (ஸல்) அவர்களை கொலை செய்ய முயன்றதால் கைபர் என்ற பகுதிக்கு நாடு கடத்தப்பட்ட பனூ நதீர் என்ற யூதகுல தலைவர் ஹூயயை பின் அக்தப் என்பவரின் மகள். சற்று குள்ளமான உருவமுடையவர். கினானா இப்ன் அல் ரபீ என்ற யூதத் தலைவரின் புதுமனைவி.
கைபர் யூதர்களின் உழைப்பால் செழிப்பாக வளர்ந்த பகுதி. நபி (ஸல்) அவர்கள், சுமார் 1400 வீரர்களுடன் கைபர் பகுதியை தாக்கினார். வெளியில் வர அஞ்சிய யூதர்கள் தாக்குதல் கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டனர். இரவு நேரத்தில் வெளியில் வந்து குடிநீரையும், உணவையும் சேகரித்துக்கொண்டு மீண்டும் கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டனர். இதை அறிந்த முஹம்மது நபி, யூதர்களை வெளியில் வரவழைக்க அவர்களது குடிநீர் கிணறுகளை விஷமாக்கியும், அவர்களது பேரீச்ச மரங்களை வெட்டியும், தீயிட்டும் கொளுத்தினார்.
புஹாரி ஹதீஸ்:4031
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை விட்டார்கள். இன்னும் வெட்டிவிட்டார்கள். அது புவைரா என்னும் இடமாகும். எனவே தான் நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படி விட்டு விட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்தி விடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்) என்னும் (59-5) இறைவசனம் அருளப்பட்டது). இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
வேறு வழியின்றி யூதர்கள் சரணடைந்தனர். பெரிய அளவில் போர் எதுவும் நிகழவில்லை கைபரின் கோட்டைகள் முஸ்லீம்கள் வசம்வந்தது. இறுதியில் பனூ நதீர் யூதர்கள் பேச்சு வார்த்தைக்கு வந்தனர். அபூ ஹூகைக் என்ற யூதருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, கோட்டைக்குள்ளிருக்கும் யூத வீரர்களைக் கொல்லக்கூடாது, அவர்களை அவர்களின் மனைவி மக்களுடன் வாழவிடவேண்டும், கைபரின் நிலம், செல்வங்கள், கால்நடைகள், ஆயூதங்கள் அனைத்தும் முஸ்லீம்களுக்கு சொந்தம், யூதர்கள் கைபரை விட்டு வெளியேறி விடவேண்டும். இதில் எந்த ஒரு பொருளை யூதர்கள் மறைத்தாலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் பொறுப்பு நீங்கிவடும்.
Sourcing Ibn Ishak, Tabari writes:
‘Kinanah b. al-Rabi b. al-Huqyaq who had the treasure of B. Nadir was brought to the Messenger of God, who questioned him; but he denied knowing where it was. Then the messenger of God was brought a Jew who said to him, “I have seen Kinanah walk around this ruin every morning.” The Messenger of God said to Kinanah: “What do you say? If we find it in your possession, I will kill you.” “All right,” he answered. The Messenger of God commanded that the ruin should be dug up, and some of the treasure was extracted from it. Then he asked him for the rest of it. Kinanah refused to surrender it; so the Messenger of God gave orders concerning him to al-Zubayr b. al-’Awwam, saying, “torture him until you root out what he has.” Al-Zubayr kept twirling his firestick in his breast until Kinanah almost expired; then the Messenger of God gave him to Muhammad b. Maslamah, who beheaded him to avenge his brother Mahmud b. Maslamah.”‘
மேற்படி ஒப்பந்தத்தை அபூ ஹூகைக்கின் மகன்கள் அவர்களுடைய தோல்பையில் சில பொருட்களையும், ஸஃபியாவின் தந்தை ஹூயயை பின் அக்தப்பின் நகைகளையும் மறைத்ததால் அவர்கள் கொல்லப்பட்டனர். ஸஃபியாவின் கணவர் கினானாவை அவர்கள் மறைத்த கஜானா இருக்குமிடத்தை கூற மறுத்ததால், முஹம்மது நபி அவர்களின் உத்தரவின்படி பழுக்க காய்ச்சிய ஆயுதங்களால் கினானாவின் மார்பில் குத்தி சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்.
போர்க்கைதிகள் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டனர். அப்பொழுது திஹ்யா பின் கல்ஃபி என்ற நபித்தோழர் தனக்கு கைதிகளிலிருந்து ஒரு பெண்ணை கேட்கிறார், உடனே, உனக்கு விருப்பமான பெண்ணை அழைத்துச் செல்க! என்று கூற, அவர் அழகும் இளமையும் நிரம்பிய ஸஃபியா அழைத்துச் சென்றுவிட்டார். அதைக் கண்டு பொறாமை கொண்ட மற்ற ஸஹாபிகள் ஸஃபியாவின் இளமையையும் அழகையும் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தனர். உடனே பிலாலிடம், திஹ்யா பின் கலீஃபாவையும், ஸஃபியாவையும் தன்னுடைய கூடாரத்திற்கு அழைத்துவர உத்தரவிட்டார்.
பிலால், திஹ்யாவையும், ஸஃபியாவையும், கினானாவின் சகோதரிகளையும் அழைத்துக் கொண்டு போர்களத்தின் வழியே அழைத்து வருகிறார். போர்களத்தில் தங்களுடைய சகோதரர்களும், உறவினர்களும், நண்பர்களும் பிணமாக கிடப்பதைகண்டு ஒரு பெண் கதறி வீறிட்டு அழுகிறார், புழுதியில் புரண்டு கதறுகிறார். ஒரு பெண் அதிர்ச்சியில் உறைந்து அழுகையை வெளிப்படுத்த இயலாமல் வாயடைத்து போகிறார். இதில் இரண்டாமவரே ஸஃபியா. இந் நிலையில் நபி (ஸல்) அவர்களின் கூடாரத்தை அடைகின்றனர்.
வீறிடும் அப்பெண்களை கண்டு, “முதலில் இந்த ஷைத்தான்களை வெளியேற்றுங்கள்” என பிலாலிடம் கூறி, அச்சப்படும் விதமாக போர்களத்தில் பிணங்களுக்கு நடுவே அழைத்து வந்ததற்காக, ஏன் இரக்கத்துடன் நடந்து கொள்ளவில்லை எனவும் பிலாலை கண்டிக்கிறார். பிறகு ஸஃபியாவை கண்டவுடன் தன்னுடைய மேலங்கியை ஸஃபியாவின் மீது வீசி போர்த்துகிறார். அதாவது இனி தன்னுடையவள் என்று பொருள். கினானாவின் சகோதரிகள் உட்பட தன்னுடைய பங்கிலிருந்த ஏழு அடிமைகளாக்கப்பட்ட கைதிகளையும் திஹ்யாவிற்கு வழங்கி ஸஃபியாவை தனது உடைமையாக்கிக் கொணடார்.
Sunan Abu Dawud, Book 19, #2991:Anas said:
“A beautiful slave girl fell to Dihyah. The apostle purchased her for seven slaves. He then gave her to Umm Sulaim for decoration her and preparing her for marriage.”
இது ஸஹாபிகள் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது ஏனென்றால் ஸஃபியாவின் தந்தை முஹம்மது நபியின் தலையில் பறாங்கல்லைத் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற கொலைகாரன் என்று நபியால் குற்றம் சாட்டப்பட்டவர் அதன் காரணமாகவே பனூ நளீர் யூதர்கள் கைபருக்கு நாடுகடத்தப்பட்டனர். ஸஃபியாவின் தந்தை மிக மோசமான எதிரி என்று நபியால் குறிப்பிடப்பட்டவர்.
பனூ நதீர் யூதர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். யூதர்களின் உழைப்பால் செழித்திருந்த கைபரின் நிலங்கள், 3600 பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அதில் சரிபாதியை, 1800 பங்குகளை போரில் ஈடுபட்ட தனது படையினருக்கு பகிர்ந்தளித்தார். 200 குதிரைவீரர்களுக்கு, குதிரைக்கு இரண்டு பங்கும், வீரருக்கு ஒரு பங்கு என்று மூன்று பங்குகள் அளிக்கப்பட்டது. காலட்படையினருக்கு மீதமிருந்த 1200 பங்குகள் அளிக்கப்பட்டது. மறு பாதியை, முஸ்லீம்களுக்கு ஏற்படும் பொதுப் பிரச்சனைகளுக்காக ஒதுக்கப்பட்டது.
புஹாரி ஹதீஸ் : 4228
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின் (போர்ச் செல்வத்திலிருந்து) குதிரைக்கு இரு பங்குகளையும் காலாட்படை வீரருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள். இந்த அறிவிப்பிற்கு நாஃபிஉ (ரஹ்) அவர்கள், (போரில் கலந்து கொண்ட) ஒரு மனிதருடன் ஒரு குதிரையிருந்தால் (குதிரைக்காக இரு பங்குகளும், உரிமையாளருக்காக ஒரு பங்கும் சேர்த்து) அவருக்கு மூன்று பங்குகள் கிடைக்கும். அவருடன் குதிரை இல்லாவிட்டால் அவருக்கு ஒரு பங்கு கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார்கள்.
நிலத்தை செம்மைப்படுத்தி விவசாயம் செய்து மகசூலில் ஒரு பகுதியை (50%) தரவேண்டும். நபி (ஸல்) கூறும் காலம் மட்டுமே தங்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து நிலம் யூதர்களிடம் தரப்பட்டது.
புஹாரி ஹதீஸ் -2499
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் நிலங்களை யூதர்களுக்கு, அவற்றில் அவர்கள் உழைதது விவசாயம் செய்ய வேண்டும் என்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது (பாதி இஸ்லாமிய அரசுக்குரியது) என்றுபம் நிபந்தனையிட்டு கொடுத்துவிட்டார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா என்பவரை கண்காணிப்பாளராக நியமித்தார். இப்போரில் யூதர்களின் பெரும் செல்வம் முஸ்லீம்கள் வசமானது.
புஹாரி ஹதீஸ் :4243
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.
கைபரை வெற்றிக் கொள்ளும் வரையில் நாங்கள் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை
புஹாரி ஹதீஸ் : 4242
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
கைபர் வெற்றி கொள்ளப்பட்ட போது, இனி நம் வயிறு பேரீச்சங் கனிகளால் நிரம்பும் என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம்
தன்னால் அடிமையாக்கப்பட்ட, ஸஃபியாவை அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்து(?) அதையே திருமணத்திற்கான மஹராகவும் அறிவித்து திருமணம் செய்தார்.
புஹாரி ஹதீஸ் -2499
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
(கைபர் போரில்) ஸஃபியா பின்த் ஹூயை அவர்களை நபி (ஸல்) அவர்கள் கைது செய்து, பின்னர் விடுதலை செய்து, தாமே அவர்களை மணமுடித்தும் கொண்டார்கள். அறிவிப்பபாளர்களில் ஒருவரான ஸாபித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார். இந்த செய்தியைக் கூறுகையில் அனஸ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் என்ன மஹ்ர் கொடுத்தார்கள் என்று நான் கேட்டேன், (ஸஃபியா) அவர்களது விடுதலையையே அவர்களின் மஹ்ராக ஆக்கினார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
அன்றிரவு இஸ்லாமைப்பற்றி(?) எடுத்துரைத்து, இஸ்லாமை ஏற்க ஸஃபியாவிடம் கோரிக்கை வைக்கிறார். ஸஃபியாவும் இஸ்லாமை ஏற்கிறார். மறுநாள் வலீமா விருந்து நடைபெறுகிறது. அங்கு நபி (ஸல்) கொல்ல விஷம் வைக்கப்பட்டது.
அல்-புகாரி பாகம் 3, அத்தியாயம் 51,
எண் 2617 , அனஸ் (ரலி) அறிவித்தார்.
யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது உண்டார்கள். “அவளைக் கொன்று விடுவோமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது அவர்கள் “வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.
From al-Tabari’s History, Volume 8, p. 124
ஒரு யூதப்பெண் விஷம் தோய்க்கப்பட்ட ஒரு பெண் ஆட்டின் தொடையை நபி ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தாள். அதிலிருந்து ஒரு சிறிய துண்டை அவர் எடுத்துக் கொண்டார், தன் வாயில் போட்டுக் கொண்டார், அதை மென்று மறுபடியும் அதை துப்பிவிட்டார். பிறகு தன் தோழர்களுக்கு இவ்விதமாகச் சொன்னார், “நிறுத்துங்கள், உண்மையாகவே இந்த ஆட்டுத் தொடையில் விஷம் உள்ளது என்று இது என்னிடம் சொல்லியது”. பின்பு, அந்த யூதப் பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: “இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?” என்று கேட்டார். அவள் பதில் அளித்தாள்: ” நீங்கள் உண்மையானவரா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையானவராக இருப்பீரானால், அல்லாஹ் அதை உங்களுக்கு தெரிவிப்பான், மற்றும் நீங்கள் ஒரு பொய்யராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக் கொள்வேன்”
மேலும்
அல்லாஹ்வின் ரஸூலும் அவரது தோழர்களும் அதிலிருந்து சாப்பிட்டார்கள். அந்த ஆடு, நான் விஷமூட்டப்பட்டுள்ளேன்” என்று சொல்லியது. அவர் (முஹம்மது) தன் தோழர்களிடம் “உங்கள் கைகளை அப்படியே வையுங்கள், இதில் விஷமுள்ளது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது!” என்றார். அவர்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள், ஆனால், பிஷர் இபின் அல்-பரா என்பவர் இறந்துவிட்டார். அல்லாவின் தூதர் அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: “இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?” என்று கேட்டார். அவள் பதில் அளித்தாள்: ” நீங்கள் உண்மையான நபியா என்பதை தெரிந்து கொள்ளத்தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையான நபியாக இருப்பீர்களானால் இது உம்மை பாதிக்காது இருப்பீரானால், மற்றும் நீங்கள் ஒரு அரசராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக் கொள்வேன்” .அவளை கொல்லும் படி அவர் கட்டளையிட்டார், அந்த பெண் கொல்லப்பட்டாள்.
முஹம்மது நபியின் இறுதி நாட்களில் உடல் நலக்குறைவால் துன்பமடைந்தார். அப்படி நோய்வாய்ப்பட்ட கால கட்டத்தில், பிஷருடைய தாயார் அவரை பார்க்க வந்தார்கள், அவர்களிடம் ரஸுல் இப்படியாகச் சொன்னார்: “பிஷரின் தாயே, உங்கள் மகன் பிஷரோடு கெய்பர் என்ற இடத்தில் நான் உண்ட அந்த உணவினால், இப்போது கூட என் தொண்டை அறுந்துவிடும் போல வலியை உணருகிறேன்”.
ஸஃபியாவின் கதையைத் தொடர்வோம்
தன் படையினருடன் கைபரிலிருந்து மதீனா திரும்பும் வழியில் மூன்று நாட்கள் தங்கியிருந்து ஷஃபியாவுடன் கூடி மகிழ்ந்தார்.
புஹாரி ஹதீஸ் 4213
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்கள் கைபருக்கு மதீனாவுக்கும் இடையில் (உள்ள சத்துஸ் ஸஹ்பா என்னுமிடத்தில் ஹஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மண முடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் வலீமா – மண விருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட, அவ்வாறே அது கொண்டு வந்து விரிக்கப்பட்டது. பிறகு, அதில் பேரீச்சம்பழம், பாலாடைக் கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (ஹைஸ் எனும் எளிமையான உணவு தயாரானது. அதை அங்கிருந்த முஸ்லிம்கள் உண்டனர்.) அப்போது முஸ்லிம்கள் ஸஃபிய்யா அவர்கள் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை (நபியவர்களின் துணைவி-)யரில் ஒருவரா அல்லது நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா என்று பேசிக் கொண்டனர். ஸஃபிய்யா அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஹிஜாப் – திரையிட்டுக் கொள்ளும்படி கட்டளையிட்)டால், அவர் இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரில் (-நபியவர்களின் துணைவியரில்-) ஒருவர். அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை) யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர் என்று (மக்களில் சிலர்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் புறப்பட்ட போது நமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கை அமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) திரையை இழுத்து (மூடி)விட்டார்கள்.
அவ்வாறான ஓர் இரவில், நபி (ஸல்), ஸஃபியாவுடன் கூடாரத்தில் இருக்கும் பொழுது கன்னத்தின் அடியில் இருககும் வடுவைக் கண்டு அதைப்பற்றி வினவுகிறார். அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்கள் ஊருக்கு வருவதற்கு முன், முழுநிலவு தனது இடத்திலிருந்து விலகி எனது மடியில் விழுவதாக கனவு கண்டு அதைப்பற்றி என் கணவரிடம் கூறியபொழுது அவர், வேகமாக என் கன்னத்தில் அறைந்து, “ மதீனாவில் இருக்கும் அரசரையா நீ ஆசைப்படுகிறாய்?” என்றார் அதனால் ஏற்பட்ட வடுஎன்று கூறினாராம். (இதே போன்ற கனவை கருப்பழகி ஸவ்தாவும் கண்டதாக வரலாறு கூறுகிறது)
முஹம்மது நபி, அல்லாஹ்வின் ஆணைகளை நெறி தவறாமல் பின்பற்றி முன்னுதாரணமாக வாழ்ந்தார் என்று புகழப்படுகிறார்.
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டுவிட்டு இறந்துவிட்டால் (மனைவியரான) அவர்கள் தங்களுக்காக நான்கு மாதங்கள் பத்து நாட்கள் (இத்தாவை) எதிர்பார்த்திருக்க வேண்டும்.
(குர்ஆன் 2:234)
மேலும் விதியாக்கப்பட்ட (இத்தாவான)து அதனுடைய தவனையை அடையும்வரை திருமண பந்தம் பற்றி உறுதி செய்து விடாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய உள்ளங்களில் உள்ளவற்றை அறிகிறான் என்பதை நீங்கள் அறிநது அவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.(குர்ஆன் 2:235)
விவாகரத்தாயினும், விதவையாயினும் கடைபிடிக்க வேண்டிய நான்கு மாதம் பத்து நாட்கள் தவணை காலத்திற்கு பிறகே அப்பெண்களைத் திருமணம் செய்ய வேண்டுமென்ற அல்லாஹ்வின் ஆணை, (முஹம்மது நபியால்) விதவைகளாக்கப்பட்ட ஸஃபியா மற்றும் ஜுவேரியாவின் விஷயத்திலும் மீறப்பட்டுள்ளதே என்றால்,இறைத்தூதருக்கு அல்லாஹ் அனுமதித்த 16 சலுகைகள் அல்லது தனிப்பட்ட கட்டளைகள் கீழ் கண்ட விதமாக உள்ளது.
1. போரில் கிடைத்த பொருட்களை பங்கிடுவதில் நேர்மையாக இருத்தல்
2. போரில் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை அல்லது ஐந்தில் ஒரு பங்கின் ஐந்தில் ஒரு பங்கை எடுத்துக்கொள்ளலாம்.
3. அல் விசல் – Al Wisal (இது நோன்பை அல்லது உணவு உண்ணாமல் இருப்பதைக் குறிக்கும்)
4. நான்கு மனைவிகளை விட அதிகமான பெண்களை திருமணம் செய்துக்கொள்ளுதல்
5. தன்னை முஹம்மது நபிக்கு அற்பணித்தேன் என்று வாய்வழியாக அறிக்கை செய்த பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளுதல், அவளுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் (“Yas-tan-kih”).
6. ஒரு பெண்ணின் பாதுகாப்பாளரின் அனுமதியின்றி, அவரது முன்னிலையில் அல்லாமலும் அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள நபிக்கு அனுமதியுண்டு (“Yas-tan-kih”)
7. மஹர் கொடுக்காமலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளும் உரிமை (“Yas-tan-kih”).
8. மார்க்க சுத்திகரிப்பு நாட்களிலும், ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு, உடலுறவில் ஈடுபட அனுமதியுண்டு.
9. தான் செய்த சத்தியத்தை முறித்துக் கொண்டு தன் மனைவிகளை மறுபடியும் சேர்த்துக் கொள்ள அனுமதியுண்டு.
10. முஹம்மது நபி ஒரு பெண்ணைக் கண்டு அப்பெண்ணை விரும்பினால், முஹம்மது நபிஅவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்ய வேண்டும். இபின் அல் அரபி கூறுகையில், “இதைத் தான் இரண்டு இமாம்களும் கூறினார், மற்றும் ஜையத் கதையில் வரும் நிகழ்ச்சியும் இப்படிப்பட்ட பொருளில் வந்ததே என்று அறிஞர்களும் கூறுகிறார்கள்”.
இறைத்தூதர் போரில் பிடிப்பட்டிருந்த ஷபியாவை விடுதலையாக்கினார், இந்த விடுதலையானது, ஷபியாவின் மஹராக கருதினார்.
மார்க்க சுத்திகரிப்பு இல்லாமல் மக்காவில் நுழைய அனுமதியுண்டு.
மக்காவிலும் போர் புரிய அனுமதியுண்டு.
அவரின் சொத்துக்களை யாரும் சுவிகாரம் பெறமுடியாது. அதாவது ஒரு மனிதன் வியாதியின் காரணமாக மரணத்தை நெருங்கும் போது, அவரது அனைத்து சொத்துக்களும் எடுத்துக் கொள்ளப்படும், அவருக்கு மூன்றில் ஒரு பாகம் மட்டுமே இருக்கும். ஆனால், இறைத் தூதருக்கு இப்படியில்லாமல், அவரின் சொத்துக்கள் அனைத்தும் எடுத்துக் கொள்ளப்படாமல் அவருடையதாகவே இருக்கும். இதனை நாம் “சொத்துக்களை பிரித்துக்கொடுக்கும் வசனங்களிலும், சூரத் மரியம் அத்தியாயத்திலும் காணலாம்.
முஹம்மது நபியின் மரணத்தின் பிறகும் அவரது திருமண பந்தங்கள் இரத்து செய்யப்படாது.
ஒரு பெண்ணை முஹம்மது நபி விவாகரத்து செய்தால், அப்பெண் அதன் பிறகு வேறு எந்த நபரையும் திருமணம் (நிக்காஹ்) செய்து கொள்ளக்கூடாது, வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கவேண்டும்.
“Yas-tan-kih” என்ற வார்த்தை “Yan’kah” என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இது பல உருவங்களில் வருகிறது, உதாரணத்திற்கு, “Ajab” என்ற வார்த்தையை “Ista-jab” என்றும் அழைப்பது போல, இவ்வார்த்தையை “Nakaha” மற்றும் “Istan-kaha” என்றும் கூறலாம். “என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா?” அல்லது “என்னோடு உடலுறவு கொள்கிறாயா?” என்று பொருள்படும்படி கூற “Istan-kaha” என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதியுண்டு.
உபதேசங்களும், நெறிமுறைகளும் ஊருக்கு மட்டும்தான் …! இதுதான் அல்லாஹ்வின் ஆணைகளை நெறி தவறாமல் பின்பற்றியதன் மர்மம்.
நாம் கைபரின் ஷஃபியா விஷயத்திற்கு வருவோம்…
கைபர் போரைத் தொடர்ந்து, இப்ன் மஸ்ஊது என்பவரை ஃபதக் என்ற பகுதியில் வசிக்கும் யூதர்களிடம் அனுப்பி, தன்னை (முஹம்மது நபி) இறைத்தூராக ஏற்கும்படி கூறினார். கைபருக்கு ஏற்பட்ட நிலையை கண்ட அந்த யூதர்கள், ஃபதக்கின் விளைச்சலில் சரிபாதியை தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். எவ்விதமான போரும் இன்றி ஃபதக் வெற்றி கொள்ளப்பட்டதால் ஃபதக்கின் சரிபாதி விளைச்சல் முஹம்மது நபிக்கு மட்டுமே சொந்தமாயிற்று.
இத் திருமணத்தை விமர்சிப்பவர்களை இஸ்லாமிய அறிஞர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இஸ்லாமையும் முஸலீம்களையும் காப்பாற்ற அல்லாஹ் செய்த ஏற்பாடே இத்திருமணம் என்றும், தன்னைக் கொல்ல முயன்றவரின் மகளைத் திருமணம் செய்த உத்தமர் மேலும் ஸஃபியாவின் சம்மதத்துடனே இத் திருமணம் நிகழ்ந்துள்ளது. எனவே இது சிறந்த முன்னுதாரணமாகும் என வாதிடுகின்றனர்.
ஸஃபியாவின் அன்புக்குரிய கணவனை சாகும் வரை சித்திரவதை செய்து கொலை செய்யவும், தந்தையாரையும், உறவினர்களையும் மற்றும் தன்னுடைய நலம் விரும்பிகளையும் படுகொலை செய்யவும் முழுமுதற் காரணமாக இருந்தவர் நபி (ஸல்) மட்டுமே. அத்தகைய ஒருவர் அழைத்தவுடன் எந்த பெண்ணால் படுக்கையில் துள்ளிக் குதித்து தயார் நிலையில் இருக்கமுடியும்? ஸஃபியாவால் நபி (ஸல்) அவர்களுடன் படுக்கையில் எப்படி சல்லாபம் புரிய முடியும்?. ஸஃபியா, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கள்ளக் காதலியாகவோ, அல்லது அவர் ஒரு விபச்சாரியாகவும் இல்லாத நிலையில்; ஸஃபியா, நபி (ஸல்) அவர்களால் உறவு கொள்ளப்பட்டது, கற்பழிப்புதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. உண்மை இவ்வாறிருக்க, முழுநிலவு தன்னுடைய மடியில் விழுவதாக கனவு கண்டதாக ஷஃபியா காதல் ரசம் வழிய கூறினாராம். அருவருப்பாக தோன்றவில்லையா?
நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்னும் யூதஉறவினர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். ஹிஜ்ரி 50 ம் ஆண்டு தன்னுடைய 60 ம் வயதில் காலமானார்.
சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் பெண்களை வன்முறையால் அடிமைகளாக கைப்பற்றி தீராத வெறியை நிறைவேற்றுவதும்; இக் கொடூரச்செயல் இறைவனின் அனுமதி (குர்ஆன் 23:6, 70:30) எனக் கூறுவதும்; வெறி பிடித்த தன்னுடைய கூட்டத்தினரையும் கற்பழிக்க ஊக்குவிப்பதும் (குர்ஆன் 4:24); ஒருவேளை அடிமைகளாகக் கைப்பற்றப்பட்ட அப்பெண்களை திருமணம் செய்ய விரும்பினால் (குர்ஆன் 4:25), அவர்களின் விடுதலையையே திருமணத்திற்கான மஹராக கூறுவதும், நபி (ஸல்) அவர்களின் அழகிய முன் மாதிரிகளாகும்.
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக