திங்கள், 5 டிசம்பர், 2011

பகவத்கீதை புனித நூலா? 'மனுதர்ம' கையேடுவா?

             மகாபாரத்தில் அருசுனனுக்கு கண்ணன் கூறுவதை கீதோபதேசம் என்றும் அதையே,   " பகவத்கீதை " என்றும்  சொல்கிறார்கள்!     இந்த பகவத் கீதையைத்தான்   இந்துக்களின் புனித நூலாக,  இந்து மதத்தில் சிறிய அளவில உள்ள பிராமிணர்கள் வலிந்து கூறிவருகிறார்கள்!    எத்தனையோ புராணங்கள், திருவிளையாடல்கள், பக்தி நூல்கள், பஜனைப் பாடல்கள், பாமாலைகள், இருக்க,        அவைகளுக்கு இல்லாத சிறப்பும் பெருமையும்  பகவத் கீதைக்கு இருப்பதால் தான் புனித நூலாக சொல்லுகிறார்களா? என்ற கேள்வி  என் மனதில் அவவப்போது,   எழுவதுண்டு!

      இந்துமதத்தில் ' சைவம்- வைணவம் 'என்ற இரண்டு பிரிவுகள் உள்ளநிலையில், வைணவ நூலான பகவத் கீதையை எப்படி சைவர்கள்  புனித நூலாக ஏற்றுக்கொண்டார்கள்?  இத்தனைக்கும் வைணவர்களை விட இந்துமதத்தில் சைவர்களே அதிகம் இருகிறார்கள் என்கிற நிலையில்,  சைவர்களும் பகவத் கீதையை புனித நூலாக  ஏற்றுகொண்டார்கள்  என்பது  உண்மையாக  இருக்குமானால்,  சைவர்களின் எந்த நூலுக்கும் புனித நூலாகும் தகுதி இல்லை என்பதை  சைவர்கள்  ஒப்புக் கொண்டுள்ளார்கள்  என்றுதானே ஆகிறது?  போகட்டும், அது சைவர்களின் கவலை!
          பகவத் கீதையை  இந்துமதத்தின் புனித நூலாக ஏற்றுக் கொள்ளுவதற்கு காரணம் ,   அதை பகவான் கண்ணன்  அருளியது.என்று சிலர் வாதிடலாம்!   அப்படி வாதிட்டால், மற்ற அனைத்து பக்தி நூல்களும், இந்து மத புராணங்களும் மனிதர்களால் ஆக்கப்பட்ட  குப்பைகள்தான் என்பதை ஏற்றுகொள்ள வேண்டி வரும்!   இது ஒருபுறம் இருக்கட்டும், பகவத் கீதையில் அப்படி பகவான் கண்ணன் என்னதான் சொல்லியிருகிறார்?   எதனைப் புனிதமானதாக கூறுகிறார் என்று பார்த்தால்,    ராஜாஜி முன்பு தமிழகத்தில் கொண்டுவந்தாரே,   'குலக் கல்வி'  என்று?  அதைப்போல பகவான் கண்ணனும், அவரவருக்கு உரிய தொழிலை கைவிடக்கூடாது, எனக் கூறுகிறான்! அதாவது நான்கு வர்ணதர்மத்தை வலியுறுத்துகிறார்.

        குருஷேத்திர யுத்தத்தில்  எல்லோருக்கும் பொதுவான தர்மத்தை, அறத்தை,போதிக்க வேண்டிய கண்ணன்,பார்பனியத்தை.. சாதிப் பாகுபாடுகளை   நியாயப் படுத்துகிறான்!  பார்பனீயத்தை வலியுறுத்தி வருவதால்தான், பகவத் கீதையை  இந்துகளின் புனித நூலாக வைணவர்கள் எனப்படும் பிராமிணர்கள் காட்டுகிறார்கள்!  அர்ச்சுனன்,      புத்தமதக் கொள்கையாகிய  'கொல்லாமையை 'நினைத்து கூறுகிறான்,        " எதிரில் இருக்கும்  எனது உறவினர்களை     ஈவு இரக்கமின்றி கொல்ல.... நான் விரும்பவில்லை.!     கண்ணா,  போர்களத்தை விட்டு நான் போகிறேன்"

         அதற்கு கண்ணன்,    "அர்சுனா   நீ.. சத்திரியனாக பிறந்து விட்டு,  உனது சுதர்மத்தை விட்டு-உனது கடமையை விட்டு ,போகிறாய்.   ஒருவன் தனது சுதர்மத்தை விட்டுவிடக் கூடாது.   வேறு ஒருவரின் தர்மத்தைப் {புத்தர்} பின்பற்றவும் கூடாது"  என்றும்   "ஒருவன் தனது சாதிக்கு உரிய தர்மத்தை செய்து  மரணமடைவது, பிறருடைய தர்மத்தை  செய்து பெருவாழ்வு வாழ்வதைவிட மேலானது!" என்றும் கண்ணன் கூறுகிறான்.      { டாக்டர். ராதாகிருஷ்ணன் மொழிபெயர்ப்பு}  அதாவது,  அர்ச்சுனன் பிறந்த சாதியைக் குறிப்பிட்டு,  உன் சாதித் தொழிலை விடக்கூடாது  என்று வலியுறுத்துகிறார். மனுஷ்மிருதியில், '"வேறு சாதித் தொழிலைச் செய்வது பெரிய குற்றம்' " என்பதையே மனதில் கொண்டு, கண்ணன் பகவத் கீதையில் அவ்வாறு கூறுகிறார்!

         கண்ணன் அதைமட்டுமா, கூறுகிறார்?  " நானே கடவுள்,. நானே.. நான்கு வர்ணங்களைப் படைத்தேன்,    நானே நினைத்தாலும் இதை மாற்ற முடியாது.!" அதாவது,     சாதி முறையைக் கடவுள்தான் படைத்தாராம்.   அந்த கடவுள் நினைத்தாலும் சாதி முறையை மாற்ற முடியாதாம்!?    சாதிமுறையை யார் மாற்ற முனைந்தாலும்  அப்போது, "நான் பிறந்து,அவர்களை அழிப்பேன் " என்று பயங்கரவாதத்தை அர்ச்சுனன் மனதில் கண்ணன் விதைக்கிறான்!
   " எப்போதெல்லாம் தர்மம் வீழ்ச்சியடைந்து, அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் நான் பிறக்கிறேன்" இங்கே தர்மம் என்று கண்ணன் கூறுவது சாதீய தர்மம்தான்!

            நமது புனித நூலின் பெருமையைப் பார்த்தீர்களா?   இந்த நூலைத்தான் நீதிமன்றங்களில் சத்தியம் வாங்க பயன்படுத்துகிறார்கள்!  ராஜஸ்தான் மாநில அரசு, பகவத் கீதையை,  பள்ளி பாடத்திட்டத்தில் சேர்த்து உள்ளதாம்.!            நமது நாடு,   மதசார்பற்ற  நாடுன்னு  பெருமைப் பட்டு,   எல்லோரும் ஒருமுறை   ஜோரா கைதட்டுங்க...,!

நன்றி THIRATTI.COM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக