ஞாயிறு, 4 டிசம்பர், 2011

இஸ்லாம் அடிமை முறையை ஒழித்ததா? (புகாரி ஹதீஸ்)



   சென்ற பதிவில் அடிமைப்பெண்களை முஸ்லிம்கள் எப்படி நடத்தவேண்டும் , அடிமைகளைப்பற்றி அல்லா எந்த மாதிரியான கருத்து கொண்டுள்ளான் என்ற அல்லாவின் வார்த்தைகளான் குரானில் இருந்து நிறைய வசனங்களை பார்த்து நிறையவே தெளிவடைந்தோம்... இந்த பதிவில் புகாரி (ஹதீஸ் என்றால் நம்பகமானது இது தான் (ஓரளவு) ,இதற்கு அடுத்தபடி முஸ்லிம் ஹதிஸ் ) .
ஹதீஸ் என்று வரும் போது நாம் பார்க்கவேண்டியது என்னவென்றால் ... முகமதைப்பற்றி நல்லவிதமாக வரும் ஹதிஸாக இருந்தால் அதைத்தான் நாம் ஆராச்சி செய்யவேண்டும். ஏனென்றால் அல்லாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் முகமதைப்பற்றி தாறுமாறாக இட்டுக்கட்டி, இல்லாத கதைகளை சொல்லவே அவரை பின்பற்றுபவர்கள் விரும்புவார்கள்... ஆனால் அவரை மிருகமாக காட்டும் ஹதிஸ் உண்மையானதாக இருக்கும் (ஏனென்றால் அவன் செய்தது  தவறு என்று அந்த கால மக்கள் உணர்ந்து இருக்கவில்லை) அதனால் முகமது செய்ததை அப்படியே சொல் வழியாக வந்தது.



      நம்ம முஸ்லிம்கள் சொல்வது அடிமைமுறை என்பது உலகம் முழுவதும் இருந்தது ..அடிமைகள் இஸ்லாம் வருவதற்கு முன்னால் மிக மோசமாக நடத்தப்பட்டார்கள் . ஆனால் இஸ்லாம் தான் அடிமைகள் ஒழுங்காக நடத்தபட வேண்டும் என்று சொல்லியது என்பார்கள். மேலும் இஸ்லாம் தான் அடிமைத்தனத்தை ஒழித்தது என்றும் சொல்கிறார்கள். அதை இப்பொழுது பார்ப்போம்.


2220. உர்வா இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார். 
ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! அறியாமைக் காலத்தில் என் சுற்றத்தாருடன் நல்லுறவு, அடிமைகளை விடுதலை செய்தல், தர்மம் செய்தல் ஆகிய நல்லறங்களைச் செய்து வந்தேன்; இவற்றிற்கு எனக்குக் கூலி உண்டா?' எனக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீர் செய்த நற்செயல்(களுக்கான நற்கூலி)களுடனேயே நீர் இஸ்லாத்தை ஏற்றுள்ளீர்!" என்றார்கள். 
Volume :2 Book :34



2538. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார். 
ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்; நூறு ஒட்டகங்களையும் அறுத்து தருமம் செய்தார்கள். இவ்வாறே, அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியபோது (ஹஜ் செய்த நேரத்தில்) நூறு ஒட்டகங்களை அறுத்து தருமம் (செய்து) நூற அடிமைகளையும் விடுதலை செய்தார்கள். நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நான் அறியாமைக் காலத்தில் நன்மையை நாடியவனாக செய்து வந்த (தரும) காரியங்களைக் குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் செய்த நற்செயல்க(ளுக்கான பிரதிபலன்)களுடனேயே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளீர்கள்" என்று கூறினார்கள். 

        ஆதாவது இஸ்லாம்வருவதற்கு முன்பே அடிமைகளை விடுதலை செய்தல் , தர்மம் செய்தல் , மற்றவர்களுடன் நல்லபடியாக பழகுவது போன்றவை இருந்திருக்கிறது.. இது இஸ்லாமினால் வந்தது இல்லை.
இஸ்லாமுக்கு முன்னாலே, மக்கள் அடிமைகளை விடுதலை செய்வது (அதாவது சக மனிதனை மனிதனாக பார்ப்பது) என்பது இருந்திருக்கிறது. அதை தான் முகமதுவும் ஒரு சில இடத்தில் கூறியிருக்கிறான். ஆனால் அடிமைப்பெண்களை கற்பழித்தால் தவறில்லை,ஒருவனின் அடிமை கொல்லப்பட்டால் மற்றொருவனின் அடிமை கொல்லப்படவேண்டும் (இது யூதர்களிடம் இருந்து காப்பி அடித்தது) என்பது போன்ற நல்ல கருத்துக்களை கொண்டுவந்தது இஸ்லாம் தான். 

     முஸ்லிம்கள் கூறும் மற்றொரு காரணம் போர் கைதிகளை வைக்க சிறைச்சாலை இல்லை. அவர்களை சுதந்திரமாக விட்டால் முஸ்லிகளுக்கு தான் ஆபத்து .. அதானால் அவர்கள் அடிமைகளாக வைக்கப்பட்டு ஆதரவு கொடுக்கப்பட்டார்கள்.......  யார் இந்த போர்க்கைதிகள் கீழே பாருங்கள்..


2541. இப்னு அவ்ன்(ரஹ்) அறிவித்தார். 
நான் நாஃபிஉ(ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்; அவர்கள் எனக்கு (பதில்) கடிதம் எழுதினார்கள். அதில் அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் பனூ முஸ்தலிக் குலத்தார் அசட்டையாக (எச்சரிக்கையின்றி) இருந்தபோது அவர்களின் மீது (திடீர்) தாக்குதல் நடத்தினார்கள்; அப்போது அவர்களின் கால்நடைகள் நீர்நிலை ஒன்றில் தண்ணீர் புகட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அவர்களில் போரிடும் திறன் பெற்றவர்களைக் கொன்றார்கள்; அவர்களின் மக்களை (பெண்கள், பிள்ளை குட்டிகளை) போர்க் கைதிகளாக சிறை பிடித்தார்கள்; அன்றுதான் ஜுவைரிய்யா(ரலி) அவர்களைக் கண்டார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) எனக்கு அறிவித்தார்கள். அவர்களும் அந்த (முஸ்லிம்) படையில் இருந்தார்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். 

இந்த ஹதிஸில் சொல்வது ..  ஆண்களை கொன்றுவிட்டு பெண்களும் ,சிறுவர் / சிறுமிகளும் அடிமைகளாக பிடிக்கப்பட்டார்கள் என்று .. இவர்கள் மூலம் கொள்ளையர் முஸ்லிமுக்கு என்ன ஆபத்து வந்து விடப்போகிறது ? . இந்த பெண்களைத்தான் அவர்கள் பங்கு போட்டுக்கொண்டு அடிமைகளாக விற்கவும் , கற்பழிக்கவும் செய்தார்கள். (அல்லாவின் கருணையை போன பதிவில் பார்க்கலாம்).  நீங்கள் பார்க்கவேண்டியது . இந்த பெண்களும் , சிறுவர் / சிறுமிகளும் இந்த கொள்ளையர்களால் தாக்கப்படுவதற்கு முன்னால் உங்களையும் என்னையும் போல் சுதந்திரமானவர்கள்.. இவர்களை அடிமைகளாக மாற்றிய பெருமை இஸ்லாமையே சேரும்.


2592. மைமூனா பின்த்து ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால், நபி (ஸல்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற முறை வந்தபோது, அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்துவிட்டேனே, அறிவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ (விடுதலை) செய்து விட்டாயா? என்று கேட்க, நான், ஆம், (விடுதலை செய்து விட்டேன்) என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (தாய் மாமன்களுக்கு அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள்.

இந்த ஹதிஸைப்பார்த்தாலே முகமதுவின் சொல் ஒன்று செயல் ஒன்று என்பது தெரியும். அவனது மனைவி அடிமையை விடுவிக்காமல் ,  அவருடைய தாய் மாமன்களுக்கு அன்பளிப்பாக குடுத்திருக்கவேண்டும் என்கிறான். 



7317. முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். 
உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் மக்களிடம் ஒரு பெண்ணுக்குக் குறைப்ப பிரசவம் ஏற்படச் செய்வது குறித்து - அதாவது (கர்ப்பிணிப்) பெண்ணின் வயிற்றின் மீது அடித்து கருவைச் சிதைத்துக் குறைப் பிரசவம் ஏற்படுத்துவது குறித்து - கேட்டார்கள். அப்போது 'இ(ந்தக் குற்றத்திற்குப் பரிகாரம் என்ன என்ப)து தொடர்பாக உங்களில் யாரேனும் நபி(ஸல்) அவர்களிடம் ஏதும் கேட்டுள்ளீர்களா?' என்று உமர்(ரலி) அவர்கள் வினவினார்கள். 'கேட்டிருக்கிறேன்' என்று நான் சொன்னேன். உமர்(ரலி) அவர்கள், 'அது என்ன?' என்று கேட்க, நான் 'நபி(ஸல்) அவர்கள், 'அந்த சிசுவுக்காக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (இழப்பீடாக) வழங்கிட வேண்டும்' என்று சொல்ல கேட்டிருக்கிறேன்' என்று சொன்னேன். உடனே உமர்(ரலி) அவர்கள், 'நீங்கள் சொன்னதற்கு ஒரு சாட்சியைக் கொண்டுவராத வரை உங்கள் பொறுப்பிலிருந்து நீங்கள் 
விடுபடமுடியாது' என்றார்கள். 
Volume :7 Book :96
இதிலும் அடிமையை விடுவிப்பது என்பது எல்லாம் இல்லை அடிமைகள் ஒரு பொருள் மாதிரியே ( நஷ்ட ஈடாக அடிமையை கொடுக்கவேண்டும்)

7263. உமர்(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மாடியறை ஒன்றில் இருந்து கொண்டிருந்தபோது நான் (அவர்களிடம்) சென்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார். நான் 'இதோ உமர் இப்னு அல்கத்தாப் வந்திருக்கிறார் என்று சொல்' என்றேன். (அவ்வாறே அவர் சொல்ல) எனக்கு அனுமதிய ளித்தார்கள்.
20 Volume :7 Book :95
இதிலே பாருங்கள் முகமதுவே அடிமைகளை வைத்திருந்தது தெரியவருகிறது.  முகமதுக்கு அடிமைகள் மேல் அவ்வளவு அக்கரை இருந்து, இஸ்லாமுக்கு அடிமைத்தனத்தை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் முகமது அடிமைகளை வைத்துக்கொள்ளாமல் அல்லவா இருந்திருக்கவேண்டும். ஆனால் மருமகள் கூட முஸ்லிம்கள் படுக்கும்  நல்ல காரித்தை முஸ்லிமளிடம் செயல்படுத்த முகமதுவே முன்னோடியாக படுத்தான் என்று கூறுகிறீர்கள் அல்லவா? அப்படி என்றால் அடிமைமுறையில் ஏன் செய்யவில்லை ????
["நபி (ஸல்) அவர்களின் திருமணங்களில் ஒன்று ஊறிப்போன அறியாமைக் கால வழக்கத்தை தகர்ப்பதற்காக நடத்தப்பட்டது. அதாவது, அரபியர்களிடம் வளர்ப்பு மகனை பெற்ற மகனாக கருதும் வழக்கம் இருந்தது. பெற்ற மகனுக்குக் கொடுக்கும் உரிமைகளையும், கடமைகளையும் வளர்ப்பு மகனுக்கும் வழங்கினர். இவ்வழக்கம் அரபியர்களிடம் ஆழமாக வேரூன்றி இருந்தது. இதைக் களைவது இலகுவானதல்ல. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்றவற்றில் இஸ்லாமின் 
சட்டங்களுக்கும் அடிப்படைகளுக்கும் இக்கொள்கை முரணாக இருக்கிறது.
மேலும், சமூகத்திலிருந்து எந்த மானக்கேடான அருவருக்கத்தக்க பழக்க வழக்கங்களை அழிப்பதற்காக இஸ்லாம் இந்த உலகத்தில் உதித்ததோ, அவை அனைத்தையும் இக்கொள்கை சமுதாயத்திற்குள் இழுத்து வருகிறது. இந்த சட்டத்தை நபி (ஸல்) அவர்களின் கரத்தால் நபி (ஸல்) அவர்களின் சொந்த வாழ்க்கை மூலமாகவே உடைக்க வேண்டுமென அல்லாஹ் நாடினான். 

7186. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 
தம் தோழர்களில் ஒருவர் 'என் ஆயுட்காலத்திற்குப் பிறகு நீ விடுதலையாவாய்' என்று தம் அடிமையிடம் சொல்லிவிட்டதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. அத்தோழருக்கு அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் இருக்கவில்லை.  எனவே, நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமையை எண்ணூறு திர்ஹங்களுக்கு விற்று, அந்தத் தொகையை அத்தோழருக்குக் கொடுத்தனுப்பினார்கள்.
52 Volume :7 Book :93


2534. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 
எங்களில் ஒருவர் தன் அடிமை ஒருவனை தன் ஆயுட்காலத்திற்குப் பிறகு விடுதலை செய்து விடுவதாக அறிவித்திருந்தார். நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமையை ("இவனை வாங்குபவர் யார்?' என்று) கூவி அழைத்து (ஏலத்தில்) விற்றுவிட்டார்கள். அந்த அடிமை (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே மரணித்துவிட்டான். 


2230. ஜாபிர்(ரலி) அறிவித்தார். 
"என்னுடைய மரணத்திற்குப் பின் நீ விடுதலையடைந்து விடுவாய்!" என்று உரிமையாளரால் வாக்களிக்கப்பட்ட அடிமையை நபி(ஸல்) அவர்கள் 
விற்றார்கள்!" 


இதில்கூட முகமது அடிமையை விடுவிக்கவில்லை . அந்த அடிமையை வேறுஒருவருக்கு விற்றிருக்கிறான் . அதாவது அடிமை விடுதலை செய்யப்படுவார்கள் என்று வாக்கு குடுத்திருந்தும் முகமதுஅவர்களை விற்றதில் இருந்து தெரியவருவது என்னவென்றால் முகமதுவுக்கு அடிமைகளை விடுவிக்கும் நல்ல எண்ணம் எல்லாம் இல்லை என்பது தான்.


1463. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
(குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம் குதிரைகளுக்காகவும் அடிமைகளுக்காகவும் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை.." 
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
Volume :2 Book :24

   இது ரொம்ப நல்லது அந்த அடிமை என்பவர்கள் குதிரைகளுக்கு சமமாக பாவிக்கப்பட்டார்கள் .


2628. அய்மன்(ரஹ்) அறிவித்தார். 
ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஐந்து திர்ஹம்கள் விலையுடைய கெட்டியான சட்டை ஒன்றை அணிந்திருந்தார்கள். அவர்கள், 'உன் பார்வையை உயர்த்தி என் அடிமைப் பெண்ணைப் பார். அவள், வீட்டில் கூட இதை அணிய (மறுத்துப்) பெருமை பாராட்டுகிறாள். ஆனால், அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் மற்ற பெண்களிடையே என்னிடம் (மட்டும் தான்) இதுபோன்றதொரு சட்டை இருந்தது. (அப்போது) மதீனாவில் (தங்கள் கணவன்மார்கள் முனபு அழகாகத் தோற்றமளிப்பதற்காக)  அலங்கரிக்கப்படுகிற (புதுமணப்) பெண்கள் என்னிடம் அதை இரவல் வாங்குவதற்காக ஆளனுப்பாமல் இருந்ததில்லை" என்றார்கள். 
Volume :3 Book :51

முகமதுவின் மனைவி ஆயிஷா( 6 வயதில் திருமணம் ஆனது) விடமும் அடிமைப்பெண் இருந்தது..  (இதில் கவனிக்க வேண்டியது ஆயிஷாவிடம் மட்டும் தான் விலை உயர்ந்த சட்டை இருந்திருக்கிறது. முஸ்லிம்களை கேட்டால் முகமது சாப்பிடுவதற்கே வழியில்லாத ஏழை என்று கதைவிடுவார்கள்)



2717. (அடிமைப் பெண்ணான) பரீரா, தன்னுடைய விடுதலைப் பத்திரத்தின் விஷயத்தில் (அதில் குறிப்பிட்டுள்ள தொகையைக் கொடுப்பதற்காக) உதவி கேட்டு என்னிடம் வந்தார். அதுவரை தன் விடுதலைப் பத்திரத்தில் எழுதப்பட்டிருந்த தொகையில் சிறிதையும் அவர் செலுத்தியிருக்கவில்லை. எனவே, நான் அவரிடம், 'நீ உன் எஜமானார்களிடம் திரும்பிச் சென்று ' உன்னுடைய விடுதலைப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தொகையை உன் சார்பாக நான் செலுத்தி விடுவதையும் உன் வாரிசுரிமை எனக்கே உரியதாய் ஆகி விடுவதையும் அவர்கள் விரும்பினால் நான் அவ்வாறே செய்கிறேன்' என்று சொல்' எனக் கூறினேன். பரீராவும் இதை அவர்களிடம் சொல்ல அவர்கள் அதை (ஏற்க) மறுத்துவிட்டனர். மேலும்,  'ஆயிஷா, மறுத்துவிட்டனர். மேலும், 'ஆயிஷா உன்னை விடுதலை செய்வதின் வாயிலாக (அல்லாஹ்விடம்) நன்மையை நாடியிருந்தால் அவ்வாறே செய்யட்டும். ஆனால்,  உன்னுடைய வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருக்கும்" என்று கூறிவிட்டனர். அதை ஆயிஷா(ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் சொல்ல அவர்கள், ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'நீ (பரீராவை) வாங்கி விடுதலை செய்து விடு. ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும்" என்று கூறினார்கள். என ஆயிஷா(ரலி) 
அறிவித்தார். 


2726. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்த அடிமைப் பெண்ணான பரீரா என்னிடம் வந்து, 'இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! என் எஜமானார்கள் என்னை விற்கப் போகிறார்கள். எனவே, என்னை நீங்கள் விலைக்கு வாங்கி விடுதலை செய்யுங்கள்" என்று கூறினார். நான், 'சரி (அப்படியே செய்வோம்)" என்று கூறினேன். அவர், 'என் எஜமானர்கள், என் வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனையிடாமல் என்னை விற்க மாட்டார்கள்" என்றார். அதற்கு நான், 'அப்படியென்றால் உன்(னை வாங்க வேண்டிய) தேவை எனக்கில்லை" என்று கூறினேன். இதை நபி(ஸல்) அவர்கள் செவியுற்ற போது... அல்லது இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டிய போது... அவர்கள், 'பரீராவின் விஷயம் என்ன?' என்று கேட்டுவிட்டு, 'அவர்கள் விரும்பியதையெல்லாம் நிபந்தனையிட்டுக் கொள்ளட்டும். நீ அவரை வாங்கி விடுதலை செய்து விடு" என்று கூறினார்கள்.    எனவே, நான் அவரை வாங்கி விடுதலை செய்து விட்டேன். அவரின் எஜமானார்கள், 'அவரின் வாரிசுரிமை எங்களுக்கே உரியது" என்று நிபந்தனை விதித்தார்கள். 
அப்போது நபி(ஸல்) அவர்கள், '(அடிமையை) விடுதலை செய்பவருக்கே (அவ்வடிமையின்) வாரிசுரிமை உரியதாகும்; அவர்கள் நூறுமுறை நிபந்தனை விதித்தாலும் சரியே"  என்று கூறினார்கள். 
Volume :3 Book :54

   இதில் கூட ஆயிஷாவின் எண்ணம் அந்த அடிமையின் வாரிசு உரிமை தனக்கு வேண்டும் என்பது தான். ( அதாவது அந்த அடிமையின் செல்வம் அவருக்கு பின்னால் ஆயிஷாவிடம் வரும் - அந்த அடிமையின் குழந்தையும் அடிமையாக வருமா என்பது எனக்கு தெரியவில்லை அதை நன்றாக அறிந்தபின் எழுதுகிறேன்)


2546. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அடிமை,  தன் எஜமானுக்கு விசுவாசமாக நடந்து, தன் இறைவனைச் செம்மையான முறையில் வணங்குவானாயின் அவனுக்கு இருமுறை நன்மை கிடைக்கும்.  என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
Volume :2 Book :49
  
   அடிமை என்பவன் தனது எஜமானுக்கு விசுவாசமாக  நடந்தால் அல்லாவிடம் இருமுறை நன்மை கிடைக்கும்.

2547. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
ஒரு மனிதரிடம் அடிமைப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து, கல்வியையும் அழகிய முறையில் கற்றுக் கொடுத்து, அவளை விடுதலையும் செய்து,  திருமணமும் முடித்து வைத்தால் அவருக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும். மேலும், ஓர் அடிமை அல்லாஹ்வின் உரிமையையும் தன் எஜமானர்களின் உரிமையையும் ஒழுங்காக) நிறைவேற்றுவானாயின் அவனுக்கும் இரண்டு நன்மைகள் கிடைக்கும். 
என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். 
Volume :2 Book :49

   அடிமையைப்பற்றி பார்த்ததில் இதில் தான் அடிமையை விடுவித்து திருமணமும் செய்வித்தால் என்று இருக்கிறது .. இதில் பார்க்க வேண்டியது ஒழுக்கம் கற்பித்து .. (இஸ்லாமை கற்றுக்கொடுத்து) முஸ்லிமாக மாற்றியபின் --- விடுதலைசெய்தபின் .. (இல்லாவிடில் அவளுக்கு பிறக்கும் குழந்தை அடிமையாக இருக்கும்)  திருமணம் செய்து வைக்கவேண்டும்.
ஆனால் விடுதலை செய்தாலும் அவளின் வாரிசுரிமை விடுதலை செய்தவற்கே ..


2552. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
உங்களில் எவரும் 'உன் ரப்புக்கு (அதிபதிக்கு) உணவு கொண்டு, உன் ரப்புக்கு உளூச் செய்ய உதவு, உன் ரப்புக்கு நீர் புகட்டு' என்று கூற வேண்டாம். 'என் எஜமான்; என்  உரிமையாளர்'    என்று கூறட்டும்.  "என் அடிமை;  என் அடிமைப் பெண்" என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். 'என் பணியாள்; என் பணிப்பெண்; என் பையன்" என்று கூறட்டும். 
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். 
Volume :2 Book :49
   அடிமைப் பெண் என்று கூற வேண்டாம் பணிப்பெண் என்று கூறுங்கள் என்று கூறும் முகமது , ஆனால் அவனின் கடவுள் அந்த அடிமைப்பெண்ணை --   மன்னிக்கவும் பணிப்பெண்ணை கற்பழிக்கலாம் என்று கூறுகிறான். அதாவது சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று இருக்குமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது.

2554. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து 
விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். 
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
Volume :2 Book :49 
      இதில் அடிமையிடம் அல்லா விசாரிப்பான் , எப்படி , நீ ஒழுங்கான் அடிமையாக இருந்தாயா என்று ?  


2545. மஃரூர் இப்னு சுவைத்(ரஹ்) அறிவித்தார். 
நான், அபூ தர் கிஃபாரீ(ரலி) ஒரு மேலங்கியை (தம் மீது) அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களைக் கண்டேன். அப்போது அவர்களின் அடிமையும் ஒரு மேலங்கியை அணிந்திருந்தார். அதைப்பற்றி (இருவரும் ஒரே விதமான ஆடை அணிந்திருப்பது பற்றி) அபூ தர்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்; நான் ஒருவரை (அவரின் தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன்; அவர் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி(ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) 'இவரின் தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா?' என்று கேட்டார்கள். பிறகு, 'உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். எனவே, எவரின் ஆதிக்கத்தின் கீழ் அவரின் சகோதரர் இருக்கிறாரோ அவர், தன் சகோதரருக்கு, தான் உண்பதிலிருந்து உண்ணத் தரட்டும். தான் உடுத்துவதிலிருந்தே உடுத்தத் 
தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது சுமத்தாதீர்கள். அப்படி அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்" என்று கூறினார்கள். 
Volume :2 Book :49

   முகமதுக்கு இந்த பரிவு எதனால் என்றால் அடிமை முஸ்லிமாக இருப்பதினால் ( ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)


5279. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார் 
(அடிமைப் பெண்ணாயிருந்து விடுதலை அடைந்த) பரீராவின் விஷயத்தில் மூன்று வழிமுறைகள் கிடைக்கப்பெற்றன: 
1. அவர் தம் (அடிமைக்) கணவர் விஷயத்தில் (அவருடன் தொடர்ந்து வாழவும், அல்லது பிரிந்துவிடவும்) உரிமை அளிக்கப்பட்டார்.
2. 'அடிமையின் வாரிசுரிமை ('வலா') விடுதலை செய்தவருக்கே உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
3. பாத்திரம் ஒன்றில் இறைச்சி கொதித்துக் கொண்டிருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன் ரொட்டியும் 
வீட்டிலிருந்த குழம்பும் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் 'பாத்திரத்தில் இறைச்சி இருக்கக் கண்டேனே! (அது என்னவாயிற்று?)' என்று கேட்டார்கள். அதற்குக் குடும்பத்தார் 'ஆம்! (இருக்கிறது)ஆனால், அது பரீராவுக்கு தர்மமாக வழங்கப்பட்டதாகும். தாங்கள் தாம் தர்மப் பொருட்களைச் சாப்பிடமாட்டீர்களே?' என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அது பரீராவுக்குத்தான் தர்மம்; நமக்கு அது (பரீராவிடமிருந்து) அன்பளிப்பு' என்றார்கள். 
Volume :6 Book :68
     முகமது உளறியது சட்டமாகிவிட்டது .


2379. 'மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பின்னர் பேரீச்ச மரங்களை வாங்கியவர் (அந்த விளைச்சல் எனக்கே சேர வேண்டும் என்ற) நிபந்தனையிட்டிருந்தாலே தவிர அவற்றின் விளைச்சல் விற்றவருக்கே உரியதாகும். செல்வம் வைத்திருக்கும் ஓர் அடிமையை வாங்கியவர், (அந்த அடிமையின் செல்வம் எனக்கே சேர வேண்டும் என்ற) நிபந்தனையிட்டிருந்தாலே தவிர அவ்வடிமையின் செல்வம் விற்றவருக்கே உரியதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
Volume :2 Book :42

2203. நாஃபிவு(ரஹ்) அறிவித்தார். 
"மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட எந்த மரமாவது அதன் கனிகள் (யாருக்குச் சேரும் என்பது) பற்றிப் பேசப்படாமல் விற்கப்படுமானால் அவை மகரந்தச் சேர்க்கை செய்த(விற்ற)வருக்கே உரியவையாகும்! அடிமையும் பயன்படுத்தப்பட்ட நிலமும் கூட இவ்வாறே ஆகும்!" 
Volume :2 Book :34

முகமதுவைப்பொருத்தவரையில் அடிமை=மரம்=நிலம்


2533. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
உத்பா இப்னு அபீ வக்காஸ் தன் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனை, 'அவன் என்னுடைய மகன்" என்று கூறி, அவனைப் பிடித்து வரும்படி உறுதிமொழி வாங்கியிருந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது (மக்கா நகருக்கு) வந்திருந்த சமயம், ஸஅத்(ரலி) ஸம்ஆவுடைய அடிமைப் பெண்ணின் மகனைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் வந்தார். ஸம்ஆவின் மகன் அப்து(ரலி) அவர்களையும் தம்முடன் கொண்டு வந்தார். பிறகு ஸஅத்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரரின் மகன். என் சகோதரர் என்னிடம் இவன் தன் மகன் என்று (கூறி இவனை அழைத்து வர) உறுதிமொழி வாங்கியுள்ளார்" என்று கூறினார்கள். அப்து இப்னு ஸம்ஆ(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இவன் என்னுடைய சகோதரன்; என் தந்தை ஸம்ஆவின் அடிமைப் பெண் பெற்றெடுத்த மகன்; தன் தந்தையின் படுக்கையில் (என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாய் இருந்த போது) பிறந்தவன்" என்று கூறினார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைப் பார்த்தார்கள். அவன் மக்களில் உத்பாவிற்கு மிகவும் ஒப்பானவனாக இருந்ததைக் கண்டார்கள். (ஸம்ஆவின் மகன் அப்து(ரலி) அவர்களை நோக்கி) 'அப்து இப்னு ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன்" என்று கூறினார்கள். அவன் அப்துவின் தந்தை ஸம்ஆவின் படுக்கையில் பிறந்தவன் என்னும் காரணத்தால் இப்படிக் கூறினார்கள். (பிறகு) இறைத்தூதர் (தம் மனைவி சவ்தா(ரலி) அவர்களை நோக்கி,) 'ஸம்ஆவின் மகள் சவ்தாவே! இவன் பார்வையில் படாத வண்ணம் நீ திரையிட்டுக் கொள்" என்று கூறினார்கள். தோற்றத்தில் உத்பாவுக்கு ஒப்பாக அவன் இருந்ததைக் கண்டதாலேயே நபி(ஸல்) அவர்கள் இப்படிக்கட்டளையிட்டார்கள். சவ்தா(ரலி) நபி(ஸல்) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். 
Volume :2 Book :49

இதில் அந்த அடிமைப்பெண் குழந்தை பிறந்த பின்னும் அடிமையாகவே இருக்கிறாள். அந்த பையன் யாருக்கு சொந்தம் என்று அவளால் தீர்மானிக்க முடியாது. அந்த பையன் , அடிமையின் எஜமானனையே சேரும்.  இதிலே முகமதுவின் சந்தேக புத்தியையும் பார்க்கமுடிகிறது. (பிறகு) இறைத்தூதர் (தம் மனைவி சவ்தா(ரலி) அவர்களை நோக்கி,) 'ஸம்ஆவின் மகள் சவ்தாவே! இவன் பார்வையில் படாத வண்ணம் நீ திரையிட்டுக் கொள்" ).  சந்தடி சாக்குல முகமது அவனின் மனைவியிடம் அந்த அடிமைப்பையன் முன் வரவேண்டாம் என்று கூறுகிறான்.( முகமதுவுக்கு அவனின் மனைவியின் மேல் அந்த அளவுக்கு நம்பிக்கை , இதே மன நிலைமையை அனைத்து முஸ்லிம்களிடமும் பார்க்கலாம்)
[தன் தந்தையின் படுக்கையில் (என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாய் இருந்த போது) பிறந்தவன்")  அதாவது அடிமைப்பெண் என்பவள் முதலில் படுப்பதற்கு தான் போல, மற்ற வேலைகள் எல்லாம் அடுத்த படி தான்].


5204. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போன்று அடிக்க வேண்டாம். (ஏனெனில்,) பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுடனேயே (நாணமில்லாமல்) உறவுகொள்வீர்கள். என அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) அறிவித்தார். 140Volume :5 Book :67

   முகமதுவுக்கு என்ன ஒரு நல்ல மனது .. மனைவிகளை அடிமையை அடிப்பது போல் அடிக்கவேண்டாம் .....காராணம் -- இரவில் அவளுடன் படுப்பீர்கள் என்பதினால் .. இதில் தெரியவருவது என்ன? மனைவியை அடிக்கலாம் ஆனால் அடிமையை அடிப்பது போல் சவுக்கால் அல்ல .. இரண்டாவது அடிமையை பின்னி எடுக்கலாம்...
   
கடைசியாக ....
  முகமதுவைப்பொருத்தவரை அடிமைத்தனம் என்பது எதுவரை இருக்கும் என்று பார்த்துவிட்டு இந்த பதிவை முடிக்கலாம்.

50. நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டதற்கு 'ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது' எனக் கூறினார்கள். அடுத்து 'இஸ்லாம் என்றால் என்ன?' என்று கேட்டதற்குவர்கள் கூறினார்கள். 'இஸ்லாம் என்பது 
அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும் தொழுகையை நிலை நிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்" என்று கூறினார்கள். அடுத்து 'இஹ்ஸான் என்றால் என்ன?' என்று அவர் கேட்டதற்குவர்கள் கூறினார்கள்: '(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்' அடுத்து 'மறுமை நாள் எப்போது?' என்று அம்மனிதர் கேட்டதற்கு 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கிற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானார்) அதன் (சில)  அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்" என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். 'மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது." (திருக்குர்ஆன் 31:34) பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார்.  'அவரை அழைத்து வாருங்கள்" என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. அப்போது, 'இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஜிப்ரீல்(அலை) அவர்களின் கேள்விகளுக்கு நபி(ஸல்) அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தும் நம்பிக்கையைச் சேர்ந்தது என்று புகாரி ஆகிய நான் கூறுகிறேன். 
Volume :1 Book :2

   அதாவது முகமதைப்பொருத்தவரை அடிமைத்தனம் என்பது இந்த உலகம் அழியும் வரை இருக்கும் என்று கூறுகிறான்.  அடிமைத்தனத்தை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்திருந்தால் 
 அடிமைகளை வைத்து இருந்திருக்க மாட்டான்.  அநியாமாக ஆண்களை கொன்றூவிட்டு பெண்களையும் சிறுவர்களையும் அடிமைகளாக மாற்றினான். அது மட்டும் அல்ல . அவனது எண்ணம் .. அடிமைத்தனம் என்பது உலகம அழியும் வரைஇருக்கும் என்று கூறியதின் மூலம் -- அவனுக்கும் அறிவு இல்லை அல்லாவுக்கும் அறிவு இல்லை என்பது நிருபனமாகிவிட்டது. காபிர்களான நாம் எல்லோரும் சேர்ந்து அடிமைத்தனத்தை ஒழித்ததினால் , அல்லாவுக்கு எதிரியாக மாறிவிட்டோம்.


உங்களின் கருத்துக்களை கூறுங்கள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக