ஞாயிறு, 4 டிசம்பர், 2011

இஸ்லாத்தில் மருத்துவம்

 

இஸ்லாமிய மருத்துவம் தொடர்பாக ஒரு இணையதளத்தில் வெளியிட்டவற்றில் சில பகுதிகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்.
5678. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.2
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :6 Book :76
5679. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) கூறினார்
நாங்கள் (மகளிர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொண்டோம். (போரின்போது) மக்களுக்கு தண்ணீர் புகட்டிக்கொண்டும் அவர்களுக்குப் பணிவிடைகள் புரிந்துகொண்டும், கொல்லப்பட்டவர்களையும் காயமுற்றவர்க(ளுக்கு மருந்திட்டு அவர்க)ளையும் மதீனாவுக்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம்.3
Volume :6 Book :76
5680. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் 'மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்' என்று கூறினார்கள்.4
மற்றோர் அறிவிப்பில், 'தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது' என வந்துள்ளது.
Volume :6 Book :76
5681. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது, தேன் அருந்துவது, நெருப்பால் சூடிட்டுக் கொள்வது ஆகியனவே அந்த மூன்றும். (இருப்பினும்,) நான் என் சமுதாயத்தாருக்கு நெருப்பால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமெனத் தடை விதித்கிறேன்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :6 Book :76

5683. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்கள் மருந்துகளில் ஒன்றில் நன்மை ஏதேனும் 'இருப்பதாயிருந்தால்' அல்லது 'இருக்கிறதென்றால்' நோயின் தன்மைக்கு ஏற்றபடி இரத்தம் உறிஞ்சும் கருவியால் (உடலில்) கீறுவது, அல்லது தேன் அருந்துவது, அல்லது நெருப்பால் சூடிடுவதில் தான் அது உள்ளது. (ஆயினும்,) சூடிடுவதை நான் விரும்பவில்லை.
என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
Volume :6 Book :76
5684. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து 'தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது' என்று கூறி)டவே, மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி(ஸல்) அவர்கள் அப்போதும், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), '(தாங்கள் சொன்னதையே) நான் சென்தேன். (ஆனால், குணமாகவில்லை)' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது: அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார்.
Volume :6 Book :76

5686. அனஸ்(ரலி) கூறினார்
('உரைனா' குலத்தைச் சேர்ந்த) மக்கள் சிலர், மதீனாவின் தட்ப வெப்ப நிலை தங்களுக்கு ஒத்துவரவில்லை என்று கருதினர். எனவே, நபி(ஸல்) அவர்கள் அந்த மக்களைத் தம் ஒட்டக மேய்ப்பரிடம் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் குடிக்கும்படி பணித்தார்கள். (அதன்படி) அவர்கள் அந்த ஒட்டக மேய்ப்பரிடம் சென்று ஒட்டகங்களின் பாலையும் அவற்றின் சிறு நீரையும் குடித்தார்கள். அவர்களுக்கு உடல் நலம் ஏற்பட்டதும் ஒட்டக மேய்ப்பரைக் கொன்றுவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அவர்களைத் தேடி(ப் பிடித்து) வர (ஆட்களை) அனுப்பி வைத்தார்கள் நபி(ஸல்) அவர்கள் அவர்கள் பிடித்துக் கொண்டு வரப்பட்டனர். அவர்களின் கைகளையும் கால்களையும் நபி(ஸல்) அவர்கள் துண்டித்தார்கள். அவர்களின் கண்களில் சூடிட்டார்ள்.8
கத்தாதா(ரஹ்) கூறினார்: முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்), 'இது, (கொலை, கொள்ளைக்கான) தண்டனைச் சட்டங்கள் அருளப்பெறுவதற்கு முன்னால் நடந்த சம்பவம்' என்று கூறினார்கள்.
Volume :6 Book :76
5687. காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார்
எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.
அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், 'நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்கள். நான், 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள்.
Volume :6 Book :76
5688. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கருஞ்சீரக விதைiயில் 'சாமைத்' தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது' என்று கூறினார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்:
'சாம்' என்றால் 'மரணம்' என்று பொருள். 'அல்ஹப்பத்துஸ் ஸவ்தா' என்றால், (பாரசீகத்தில்) 'ஷூனீஸ்' (கருஞ்சீரகம்) என்று பொருள்.
Volume :6 Book :76

5692. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புத் தசைவாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும்.
என உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) அறிவித்தார்.
Volume :6 Book :76
 
              மேற்படி வசனங்கள் மூலம் முகமது நபிக்கு மருத்துவம் பற்றிய அறிவு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அதாவது முதலில் நோய்களுக்கு நிவாரணமாக தேனையும், குருதியை உறிஞ்சி எடுப்பதையும், சுடு போடுவதையும் குறிப்பிடுகிறார். அதில் சுடு போட வேண்டாம் என்று தடுத்துவிட்டார். என்னென்ன நோய்களுக்கு தேனை பயன்படுத்த வேண்டும் என்றோ, குருதியை உறிஞ்சி எடுப்பது எந்த நோய்களை குணப்படுத்தும் என்றோ அவருக்கு வஹி இறங்கி சொல்லவில்லை. பிற வியாதிகளுக்கும் ஜிப்ரீலோ வஹியோ இறங்கி மருத்துவம் சொல்லித் தரவில்லை.. வேறு மூலிகைகள் பற்றியும் ஒரு குரான் வசனம் கூட இல்லை. அதே போல் கருஞ்சீரக எண்ணெயும் எல்லா நோய்களுக்கும் மருந்தாகாது. முகமது நபி கூறுவது போல் எல்லா வியாதிகளுக்கும் குருதி உறிஞ்சி எடுத்தோ, கருஞ்சீரக எண்ணெயை பயன்படுத்தியோ, தேனை உபயோகித்தோ எந்த முஸ்லீமாவது தங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்கிறார்களா?  முகமது சொன்னார் என்று பிற மதத்தவரை வெட்டு, குத்து, கொல், கற்பழி போன்றவற்றை செய்யும் முஸ்லீம்கள் மருத்துவத்திற்கு மட்டும் அவர் சொன்னதை செய்யாமல் அலோபதி, யுனானி, சித்த மருத்துவம் என்று பார்த்து குணமாக்கிக் கொள்கிறார்களே. ஏன்? முகமது நபியின் வார்ததையில் நம்பிக்கை இல்லையா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக