ஆரம்பத்தை நோக்கி: பகுதி 4
பெண் மோகம் நபி (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்படும் மிகப் பெரிய குற்றச் சாட்டு. என் மாற்று மத நண்பர்கள், உங்களது நபிக்கு பல மனைவிகள் உண்டாமே? என கேலியாக கேட்பார்கள். நான் அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் செய்து கொண்ட அனைத்து திருமணங்களும் விதவைகளுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் அளிக்கப்பட்ட மறுவாழ்வு மேலும், இன்று புரட்சிகரமானது என்று போற்றப்படும் விதவைகள் திருமணத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே முன்மாதிரியாக இருந்து நடைமுறையிலும் வாழ்ந்து காட்டியவர் எங்கள் தலைவர் முஹம்மது நபி என்று விளக்கமளிப்பேன்.உண்மையில், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை மனைவிகள் இருந்தனர் என்பது கூட எனக்குத் தெரியாது. நபி (ஸல்) அவர்களை விட, கதீஜா அம்மையார் வயது முதிர்ந்த விதவைப் பெண்மணி என்பது மட்டுமே எனக்குத் தெரிந்த அதிகபட்ச விஷயம். நான்கு மனைவிகள் இருந்திருக்கக் கூடும் என்று எண்ணிக் கொள்வேன். காரணம் திருக்குர்ஆனின் அனுமதி அவ்வளவுதான். மேலும் திருக்குர்ஆனின் போதனைகளை சிறிதும் தவறாமல் வாழ்ந்து காட்டிய உத்தமர் என்று இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் புகழாரங்களை பலமுறை கேட்டிருக்கிறேன். அவர்களது கூற்று உண்மையே என்பதில் உறுதியாகவும் இருந்தேன்.
ஈரான் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியரான சல்மான் ருஷ்டி எழுதிய, THE SATANIC VERSES (சாத்தானின் வேதம்) என்ற புத்தகம் வெளிவந்த பொழுது, மேற்கத்திய நாடுகள் இஸ்லாமின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் களங்கமற்ற தலைவர் முஹம்மது நபியின் மீது “பெண் பித்தர்” என்ற பொய்யான செய்திகளை ஊடகங்களில் திட்டமிட்டு பரவச் செய்கிறது என்று முஸ்லீம்களிடமிருந்து கண்டனக் குரல் ஓங்கி ஒலித்தது. இது நமது விரலே நமது கண்ணை குத்திக் கிழித்ததைப் போல எனக்குத் தோன்றியது.
THE SATANIC VERSES-ல் முஹம்மது நபியை கடுமையாக விமர்சனம் செய்திருப்பதாகவும், அனைத்து முஸ்லீம்களுக்கும் தாய் போன்ற தகுதியுடைய நபி (ஸல்) அவர்களுடைய மனைவியர்களை விபச்சாரிகளாக சித்தரித்திருப்பதாகவும் அறிந்த பொழுது சல்மான் ருஷ்டியை மிகவும் வெறுத்து, என்னுடைய பிரார்த்தனைகளிலும் அவரை சபித்தேன். சல்மான் ருஷ்டிக்கு வழக்கம் போல கடுமையான எதிர்ப்பும் மரண தண்டனை அறிவிப்பும் மட்டுமே நம்மால் தரப்பட்டது. திருக்குர்ஆனிலிருந்து வெளி வரும் ஒளிக்கதிர்கள் சல்மான் ருஷ்டியை அழிப்பதாக ஒரு பாகிஸ்தானிய திரைப்படம் சித்தரித்து தனது கோபத்தைத் தீர்த்துக் கொண்டது.
இறைவனால் இறக்கப்பட்டது, இப்பிரபஞ்சத்தின் மாபெரும் அற்புதம் என்று முஸ்லீம்களால் புகழப்படும் திருக்குர்ஆனை சாத்தானின் வேதம் என்று கூறிய, சல்மான் ருஷ்டியைப் போன்ற விஷக் கிருமிகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருந்தேன். களங்கமற்ற ஒரு மாமனிதரை இழிவுபடுத்தும் விதமாக எழுதிய சல்மான் ருஷ்டி மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதை மனப்பூர்வமாக ஆதரித்தேன். இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், திருக்குர்ஆனின் மகத்துவத்தையும், முஹம்மது நபி அவர்களின் களங்கமற்ற தன்மையையும், உலக மக்களுக்கும், குறிப்பாக மேற்கத்திய ஊடகங்களுக்கும் தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்றும் விரும்பினேன். பெரிதாக எதுவும் நிகழவில்லை காலப் போக்கில் எல்லாம் மறந்து போனது.
நான் தேடலின் பாதையில் செல்கையில், சல்மான் ருஷ்டியின் நினைவு வந்தது. சல்மான் ருஷ்டி அவ்வாறு ஏன் கூற வேண்டும்? என்ற சிந்தனை என்னுள் மேலோங்கத் தொடங்கியது. இஸ்லாமிய அறிஞர்கள் மறுப்பதைப் போல, சல்மான் ருஷ்டியின் குற்றச்சாட்டுகள் அபாண்டமான பொய்யாக இருப்பின், மிகக் கடுமையான எதிர்ப்புகளுக்கும் மத்தியில், உயிருக்குத் துணிந்து ஒரு பொய்யை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? திருக்குர்ஆன் உட்பட இஸ்லாமின் முழுப் பின்னணியையும் தெரிந்து கொள்ள விரும்பினேன். முதலில், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்படும் “பெண் மோகம்” கொண்டவர் என்ற குற்றச்சாட்டிற்கு சரியான பதில் தெரிந்து கொள்ள விரும்பினேன். THE SATANIC VERSES இந்தியாவில் தடை செய்யப்பட்டதால் அதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களின பலதார மணவாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பிய பொழுது சல்மான் ருஷ்டியின் குற்றச்சாட்டுகளுக்கு விடை தெரிந்தாலே போதுமானது என்று முடிவு செய்தேன்.
சல்மான் ருஷ்டியின் குற்றச்சாட்டுகளுக்கு, இஸ்லாமிய அறிஞர்களின் மறுப்புகள் புத்தகமாக வெளிவந்திருந்தது. அவற்றைப் படிக்கையில் என் மனம் திருப்தி அடையவில்லை. ஏனெனில், மார்க்க அறிஞர்கள் பலருக்கு சல்மான் ருஷ்டியை கடுமையாக எதிர்ப்பதில் இருந்த ஆவர்வம் ஆதாரங்களுடன் பதில் அளிப்பதில் இருக்கவில்லை. சிலர் THE SATANIC VERSES-ல் அவர் பயன்படுத்திய கீழ்த்தரமான (F…) வார்த்தைகளை எண்ணி கணக்கிட்டு சல்மான் ருஷ்டியை இழிவானவர் என்றனர். இன்னும் சிலர் இதைப் போன்று அநாகரீகமாக விமர்சித்தால் பதில் கூறமுடியாது என்றனர். இன்னும் சிலர், சல்மான் ருஷ்டியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்து, நபி (ஸல்) அவர்களைப் பற்றி விமர்சிக்க சல்மான் ருஷ்டி தகுதியற்றவர் என்றனர். சல்மான் ருஷ்டியின் குற்றச்சாட்டுகளுக்கு, இஸ்லாமிய அறிஞர்களால் மிகச்சரியான ஆதாரங்களுடன் பதில் அளிக்க முடியவில்லை என்றே தோன்றியது. நபியின் பலதார மணத்திற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள அவரது மனைவியர்களின் பின்னணியையும் தெரிந்து கொள்வது அவசியம் என்று முடிவு செய்தேன்.
எனக்கு கிடைத்த தகவல்கள் என்னை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் முதலில், நபி (ஸல்) அவர்களுக்கு நான்கு மனைவிகள் இருக்கலாம் என்று நான் (தவறாக) நினைத்தது ஒன்பதானது, ஒன்பது பதிமூன்றாக உயர்ந்து இருபத்து இரண்டைக் கடந்நது முப்பத்தி இரண்டைத் தொட்டது. நபி (ஸல்) அவர்களுக்கு நான்கு மனைவியர் இருக்கலாம் என்ற யூகத்தில், நான்கு மனைவியர்களைத் திருமணம் செய்ததற்கான காரணத்தை அறிந்து கொள்ள ஆய்வில் இறங்கிய எனக்கு தலைசுற்றத் தொடங்கியது…
மனைவியர்களின் பட்டியல்
ஒரு இஸ்லாமிய இணையதளம் பதிமூன்று மனைவிகளின் பட்டியலை தந்து குற்றச்சாட்டுகளை மறுத்தது. நபி (ஸல்) அவர்களின் பலதார மணங்கள் சமுதாய நலனை அடிப்படையாக கொண்டது வேறு விதமாக கண்பது தவறானது எனவும் எச்சரித்தது. இதுதான் அவர்கள் கொடுத்த பட்டியல்,
பெயர்கள் திருமண வயது திருமண வயது
- கதீஜா 40 25
- சவ்தா ? 52
- ஆயிஷா 6 52
- ஹப்ஸா 22 56
- ஜைனப் 30 56
- உம்முஸல்மா 26 56
- ஜைனப் 37 58
- ஜுவேரியா (போர் கைதி) 20 58
- உம்மு ஹபீபா 36 60
- ஸபியா (போர் கைதி/அடிமை) 17 60
- மாரியா (கிருத்துவ பெண் /அடிமை) 17 60
- ரைஹானா ( போர் கைதி/ அடிமை) 15 60
- மைமூனா 36 53
நபி (ஸல்) அவர்கள் மேலும் பல பெண்களைத் திருமணம் செய்திருப்பதாக ஹதீஸ் ஆய்வாளர் அலீ தஷ்தி குறிப்பிடுகிறார் (இவர் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்) அவர் தரும் பட்டியலையும் காண்போம்
இவர்களைப் பற்றிய குறிப்புகள்
- ஃபாத்திமா al-Tabari vol.9 p.39, al-Tabari vol.9 p.139
- ஹெந்த் (விதவை) Sahih Muslim vol.3 no.4251-4254 928-929.
- அஸ்மா பின்த் நுக்மான Bukhari vol.7 book 63 no.181 p.131,132
- அஸ்மா a-Tabari vol.9 p.135-136. al-Tabari vol.39 p.166
உறுதியற்றஉறவுகள்/ சுருக்கமாக திருமணம் செய்தல்
- உம்மு ஷரிக் al-Tabari vol.9 p.139.
- ஜைனப் al-Tabari vol.7 p.150 footnotes 215,216 and al-Tabari vol.39 p.163-164
- கவ்லா al-Tabari vol.39 p.166
- முலைகா பின்த் தாவூத் al-Tabari vol.8 p.189
- அல் ஷன்பா பின்த் அம்ர் al-Tabari vol.9 p.136
- அல் அலீய்யா al-Tabari vol.39 p.188
- அம்ராஹ் பின்த் யஜீத் al-Tabari vol.39 p.188
- கத்ைலா பின்த் கைஸ் al-Tabari vol.9 p.138-139
- ஸானா பின்த் ஸூஃப்யான் al-Tabari vol.39 p.188
- ஷாராஃப் பின்த் கலீபா al-Tabari vol.9 p.138
- 28. ஜைனப்
- பெயர் தெரியாத ஒரு பெண் al-Tabari vol.39 p.187
Wiki Islam தரும் பட்டியல் இதோ
- Khadija/Khadijah
- Sauda/Sawda bint Zam’a/Zam’ah
- A’isha
- A’isha’s Slaves
- Umm Salama
- Hafsa/Hafsah
- Zainab/Zaynab bint Jahsh
- Juwairiya/yya/yah
- Omm/Umm Habiba
- Safiya/Safiyya/Saffiya
- Maimuna/Maymuna bint Harith
- Fatima/Fatema/Fatimah
- Hend/Hind
- Sana bint Asma’ / al-Nashat
- Zainab/Zaynab bint Khozayma
- Habla
- Divorced Asma bint Noman
- Mary/Mariya the Copt/Christian
- Rayhana/Rayhanah bint Zaid
- Divorced Umm Sharik /Ghaziyyah bint Jabir
- Maymuna / Maimuna
- Zainab
- Khawla / Khawlah bint al-Hudayl
- Divorced Mulaykah bint Dawud
- Divorced al-Shanba’ bint ‘Amr
- Divorced al-‘Aliyyah
- Divorced ‘Amrah bint Yazid
- Divorced an Unnamed Woman
- Qutaylah bint Qays
- Sana bint Sufyan
- Sharaf bint Khalifah
சர்வ வல்லமையுடைய இறைவனால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்டவர், இறைச்செய்தியை மக்களிடையே கூறவந்தவர், இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்தவர் சராசரி மனித வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவர்களால் அற்பமான இன்பங்களை நாடிச் செல்ல மாட்டார்கள் என்றும், அவர்கள் உணர்ந்து கொண்ட பேரின்பத்தின் முன் இந்த உலகமும் அதன் இன்பங்களும் அற்பமானவைகளே என்றும் நினைத்துக் கொண்டேன்
நிலையற்ற இவ்வுலக வாழ்வின் இன்பங்களில் மூழ்கி நிலையான மறுஉலகவாழ்க்கையைத் தொலைத்துவிட வேண்டாம் என்பதே முஹம்மது நபி உலக மக்களுக்கு அச்சமூட்டி கூறிய உபதேசங்கள். எனவே முஹம்மது நபி (ஸல்) அவர்களின் திருமணங்கள் உடல் தேவைகளுக்கானது அல்ல. இது நிச்சயமாக, ஆதரவற்ற பெண்களுக்கு மறுவாழ்வளிக்க செய்து கொண்ட திருமணங்கள்தான் என்பதை குழப்பமடைந்த எனது மனதிற்கு உணர்த்த விரும்பினேன்.
நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களின் பின்னணியை ஆராய்ந்தால் சமுதாய காரணங்கள் என்னவென்பது தெளிவாகும். விளக்கங்களை அறிந்து கொள்ள மார்க்க அறிஞர்கள் எழுதிய புத்தகங்கள் சிலவற்றைப் படித்தேன் அவை எனக்குப் போதுமான தகவல்களைத் தரவில்லை. எனவே விரிவான செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காக இணையதள வலைக்குள் இறங்கினேன்.
“The Prophet of Allah liked three worldly objects – perfume, women and food.”இது ஆயிஷா அவர்களின் வழியாக அறிவிக்கப்படும் ஒரு நம்பகமான ஹதீஸ்.
வாசனை திரவியங்கள், பெண்கள் மற்றும் உணவு – அல்லாஹ்வின் தூதருக்கு விருப்பமான மூன்று உலக விஷயங்கள். (வேறு சில அறிவிப்புகளில், முஹம்மது நபிக்கு மிகவும் பிடித்தமான உலக விஷயங்கள், வாசனை திரவியங்களும், பெண்களுமே என காணப்படுகிறது)“பெண்களை மிகவும் பிடிக்கும்” என்பதன் பொருள் அன்பு செலுத்துவதைக் குறிப்பிடுவதாக இருக்க வேண்டும், அதனால் தான் அவர்களுக்கு உதவி அல்லது பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தின் காரணமாகவே இவ்வளவு திருமணங்களும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன். ஆதரவற்ற பெண்களுக்கு உதவி அல்லது பாதுகாப்பு வழங்குவதற்காக அனைத்து பெண்களையும், நபி (ஸல்) அவர்களே திருமணம் செய்து கொள்வதுதான் சரியான தீர்வா?
நபி (ஸல்) அவர்கள், தானே திருமணம் செய்து கொண்டிருப்பதைவிட தனது உத்தம நண்பர்களுக்கு திருமணம் செய்து வைக்க இயலுமே?, அல்லது அவர்களுக்கு வேறு வகைகளில் உரிய பாதுகாப்பு வழங்கியிருக்க முடியுமே?
என் மனதில் பலவிதமான எதிர்க்கேள்விகள் உருவாகிக் கொண்டிருந்த பொழுது வேறொரு ஹதீஸ் கண்களில் பட்டது.
Ibn Sad’s “Kitab al-Tabaqat al-Kabir, volume 1”, pages 438, 439.ஜிப்ரீல் (கேப்ரியேல் என்ற தேவ தூதன்) அல்லாஹ்வின் வஹீ செய்திகளைக் கொண்டு வந்தார் என்று மார்க்க அறிஞர்கள் கூறுவதை அறிவேன். நபி(ஸல்) அவர்களுக்கு ஆண்மையை அதிகரிக்கச் செய்வதற்கு மருந்துகளையும் கொண்டு வந்தாரா?
…The apostle of Allah said, “Gabriel brought a kettle from which I ate and I was given the power of sexual intercourse to forty men.”
(அல்லாஹ்வின் தூதர் கூறினார், ஜிப்ரீல் ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்ததை நான் அருந்தியதிலிருந்து எனக்கு நாற்பது ஆண்களின் பாலியல் பலம் கிடைத்து விட்டது.)
இன்றைய மொழியில் சொல்ல வேண்டுமென்றால், அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு, ஜிப்ரீல் மூலமாக “வயாக்கரா“வை விட வீரியமிக்க மருந்துகளை வழங்கினான் என்று சொல்லலாம்.
அப்படியானால், முஹம்மது நபியின் இத்தனை திருமணங்களுக்கும் அடிப்படைக் காரணம் என்ன?
எண்ணற்ற மனைவியர்களுடன் உல்லாசம் காண்பதற்காகத்தான்.
அல்லாஹ்வின் செய்தியை கூற வந்தவருக்கு இந்த பாலியல் வலிமை எந்த வகையில் உதவும்? நாற்பது ஆண்களுக்கு சமமான வலிமை துன்பத்திலிருப்பவருக்கு உதவவோ, தன்னை இறைத்தூதுவராக ஏற்றுக் கொண்ட மக்களைப் பாதுகாக்கவோ வழங்கப்படவில்லை. அற்ப உணர்வுகளில் உல்லாசம் காணவே நாற்பது ஆண்களுக்கு சமமான பாலியல் வலிமை வழங்கப்படடுள்ளது. என்னுடைய உறுதியான நம்பிக்கைகள் ஆட்டம் காணத் துவங்கியது. மேற்கண்ட ஹதீஸ்களைக் கண்டவுடன் நபி (ஸல்), பெண் மோகம் கொண்டவர் என்ற குற்றச்சாட்டிற்கான அடிப்படை விளங்கியது.
எனவே நபி (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கையையும், பாலியல் பலத்தையும் ஹதீஸ்களின் வழியாக எட்டிப்பார்த்தேன். முஹம்மது நபியின் மனைவியர்களைப் பற்றி நான் அறிந்து கொண்டவைகளில் சிலரைப்பற்றிய சுருக்கமான செய்திகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக